பிக் பாஸ் 3 : ‘திரும்பவும் முதல்ல இருந்தா, ஆள விடுங்கப்பா’.. தெறித்து ஓடும் ஜூலி!
பிக் பாஸ் 3யில் கலந்து கொள்ளவில்லை என ஜூலி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் சீசன் 3யில் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலை ஜூலி மறுத்துள்ளார்.
விஜய் டிவியில் அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல் இரண்டு சீசன்களைப் போலவே, இதையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இதற்கான புரொமோ ஷூட் கடந்த வாரம் நடைபெற்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அன்று தான், போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் மக்களுக்குத் தெரிய வரும்.

வதந்தி:
ஆனால் வழக்கம் போலவே இவர்கள் தான் போட்டியாளர்கள் என ஆளாளுக்கு ஒரு பட்டியல் வெளியிட்டு வருகின்றனர். இதனால் பதறிப் போன சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் ஜூலி?
இந்நிலையில், முதல் சீசன் மூலம் பிரபலமான ஜூலி மீண்டும் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. முதல் சீசனில் கலந்து கொண்ட போது சம்பாதித்த அவப்பெயரே இன்னும் ஜூலியை விட்டு அகலவில்லை.

மோசமான விமர்சனம்:
இன்னும் பலர் அவரை ஜென்ம விரோதியாகக் கருதிக் கொண்டு, சமூகவலைதளத்தில் அவர் என்ன பதிவு போட்டாலும் அதற்கு மோசமான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஜூலி மீண்டும் பிக் பாஸில் கலந்து கொள்கிறாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜூலி மறுப்பு:
இது தொடர்பாக ஜூலியை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் இத்தகவலை மறுத்துள்ளார். தான் பிக் பாஸ் 3ல் கலந்து கொள்ளவில்லை என உறுதியாக அவர் தெரிவித்துள்ளார். ஜூலி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











