இன்று இரவு கவினை கையிலேயே பிடிக்க முடியாது, சம்பவம் ஆகிடுச்சு
Recommended Video
சென்னை: இன்று இரவு கவினை கையிலேயே பிடிக்க முடியாது என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் சாக்ஷியை தான் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
முக்கோண காதல் கதை ஓடிக் கொண்டிருப்பதால் சாக்ஷி தொடர்ந்து காப்பாற்றப்படுகிறார் என்று விமர்சனம் எழுந்தது.

சாக்ஷி
முக்கோண காதல் கதையில் இருந்து சாக்ஷியை மட்டும் நீக்குவது என்று பிக் பாஸ் முடிவு செய்துவிட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சாக்ஷி ஏற்கனவே வெளியேறிவிட்டாராம். நல்ல வேளை அவரை ரகசிய அறையில் வைத்து மீண்டும் அழைத்து வராமல் போனார் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சாக்ஷியுடன் ஒப்பிடும் போது கடந்த சீசன் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா எல்லாம் தங்கம் என்று விமர்சிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.

கவின் ஆர்மி
சாக்ஷி வெளியேற்றப்பட்டுள்ள செய்தி அறிந்து இருப்பதிலேயே அதிகமாக சந்தோஷப்பட்டுள்ளது கவின் ஆர்மி தான். அப்பாடி இனி கவின் நிம்மதியாக இருக்கலாம். சிநேக்ஷியிடம் சிக்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த வீணாப் போன சிநேக்ஷியால் தான் கவினின் பெயர் கெட்டுப் போனது என்கிறது கவின் ஆர்மி.
கவின்
சாக்ஷி வெளியேற்ற செய்தி அறிந்து கவின் ஆர்மி கோவிலில் தேங்காய் உடைத்து கடவுளுக்கு நன்றி சொல்வது போன்ற வீடியோ வெளியிட்டு பிக் பாஸ் 3 பார்வையாளர்கள் கலாய்த்துள்ளனர். மேலும் இன்று இரவு கவினை கையிலேயே பிடிக்க முடியாது. சாக்ஷி இல்லாமல் ஜாலியாக லாஸ்லியாவுடன் கடலை போடலாம் கவின் என்கிறார்கள்.

கஸ்தூரி
கவினை மக்கள் கக்கூஸ் கவின் என்று கூறி மக்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருப்பதை கஸ்தூரி அவரிடம் கூறினாரா என்பது தெரியவில்லை. அப்படி கஸ்தூரி உண்மையை தெரிவித்திருந்தால் கவின் இனியாவது பெண்கள் பின்னால் திரியாமல் தன்மையாக நடந்து கொண்டால் நல்லது. கடலை போடுவதற்காகவே கவின் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார் போன்று என்று பெயர் வாங்கிவிட்டார்.


Click it and Unblock the Notifications











