தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: அதிரடி முடிவு எடுத்த பிக் பாஸ், வீடியோ இதோ
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டிற்குள் போட்டியாளர்கள் சென்ற பிறகு அவர்கள் காலையில் எழுந்து டான்ஸ் ஆடிய ப்ரொமோ வீடியோ வெளியானது. இதையடுத்து மீண்டும் ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருப்பதால் அதை காட்டி ரசிகர்களை கவர முடிவு செய்துவிட்டார்கள் போன்று. இரண்டாவது ப்ரொமோ வீடியோவில், நம் நாட்டில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். முதல் முறையாக தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்று பிக் பாஸ் கூறியதை கேட்டு போட்டியாளர்கள் கை தட்டினார்கள்.
அதை பார்த்த பாத்திமா பாபுவோ, பிக் பாஸ் வரலாற்றிலேயே தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பது ஒரு அவல நிலை, கை தட்டி வரவேற்க வேண்டியது கிடையாது என்றார். உடனே சேரன் குறுக்கிட்டு, இப்படி ஒரு லிமிட்டேஷன் கொண்டு வந்ததற்காக கை தட்டினோம் என்றார்.
வனிதா விஜயகுமாரோ ம்ம்ம்ம்ம்ம் என்பது போன்று பார்த்துக் கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டில் கமல் ஹாஸன் அரசியல் செய்கிறாரோ இல்லையோ பிக் பாஸ் ரொம்ப நல்லா செய்றார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ப்ரொமோ வீடியோவை பார்த்துவிட்டு பாத்திமா பாபுவுக்கும், சேரனுக்கும் இடையே பிரச்சனை என்று மட்டும் நினைக்கவே மாட்டோமே. இந்த ப்ரொமோ வீடியோ டக்கால்டியை எல்லாம் இரண்டு சீசனாக பார்த்துள்ளோம். நிகழ்ச்சியை இன்று இரவு பார்த்து உண்மையை தெரிந்து கொள்கிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
இந்த சீசனில் நெட்டிசன்கள் அநியாயத்திற்கு உஷாராக உள்ளனர். எந்த வீடியோ வெளியிட்டாலும் கூலாக இருக்கிறார்கள். கமான் பிக் பாஸ் பத்தல, இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் என்று மீம்ஸ் கிரியேட்டர்களை போன்றே கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் ப்ரொமோ வீடியோவில் சாண்டி நீச்சல் குளத்தில் மயங்கிக் கிடந்ததை பார்த்ததும் நெட்டிசன்கள் அது நடிப்பு என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.
நீங்க இப்படி எல்லாம் தெளிவா இருந்தால் பிக் பாஸால் எப்படி பரபரப்பை ஏற்படுத்த முடியும்?


Click it and Unblock the Notifications











