பிக் பாஸ் 3: தல பட நடிகை-ரமேஷ் அவுட், சென்னை பெண்ணுடன் பேச்சுவார்த்தை
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லைலா கலந்து கொள்வது குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்றே இதையும் உலக நாயகன் கமல் ஹாஸனே தொகுத்து வழங்குகிறார்.
கடந்த வாரம் பூந்தமல்லியில் நடந்த ப்ரொமோ ஷூட்டில் கூட கமல் கலந்து கொண்டார்.

லைலா
இந்த சீசனில் பிரபல நடிகை லைலா கலந்து கொள்கிறார் என்று செய்திகள் வெளியாகின. பெரிய பிரேக்கிற்கு பிறகு சின்னத்திரைக்கு வந்த லைலா தற்போது பெரிய திரைக்கு மீண்டும் வந்துள்ளார். இந்நிலையில் தனது கெரியரை பூஸ்ட் பண்ண அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது. உண்மையில் லைலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம்.

சாந்தினி
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சாந்தினி தமிழரசன், நடிகர் ரமேஷ் திலக் ஆகியோரும் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. நான் பிக் பாஸுக்கு செல்லவில்லை என்று ரமேஷ் திலக் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக சாந்தினி கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை
பிக் பாஸ் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியானால் தான் யார், யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தெரியும். பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று கடந்த முறை தெரிவித்த சிலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கெரியர் பூஸ்ட் ஆகும் என்ற நம்பிக்கையில் தான் பலரும் அங்கு செல்கிறார்கள். ஆனால் அது அனைவருக்கும் ஒர்க்அவுட் ஆவது இல்லை. சிலருக்கு உல்டாவாக வேலை செய்துவிடுகிறது.


Click it and Unblock the Notifications











