லாஸ்லியா 'சார்மி'தான்.. ஆனால் சாப்பிட்டுத் தூங்கும் அவருக்கு ஆர்மி ஒரு கேடா.. விளாசும் நெட்டிசன்ஸ்!

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil Losliya:சிங்கள ராணி லொஸ்லியா வரலாறு | Bigg Boss 3 Contestants

சென்னை: சாப்பிட்டு தூங்குவது, பசங்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவதை தவிர இந்த லாஸ்லியா என்னத்த பெருசா செய்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் லாஸ்லியா நமக்கு எதுக்கு வம்பு, இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவோம் என்ற முடிவில் உள்ளார் போன்று. அவர் நடந்து கொள்வதை பார்த்தால் ரித்விகாவின் நினைவு தான் வருகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

ரித்விகா மாதிரியே ஒன்றும் செய்யாமல் நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கிறார் லாஸ்லியா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லாஸ்லியா

லாஸ்லியா

லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வேகத்தில் ட்விட்டரில் அவருக்கு ஆர்மி துவங்கிவிட்டார்கள். அவர் ஆப்பிள் சாப்பிடுவதை பார்த்த ரசிகர்கள், ஒரு ஆப்பிளே இன்னொரு ஆப்பிளை சாப்பிடுகிறதே என்றெல்லாம் கூறினார்கள். மேலும் லாஸ்லியாவின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு கவிதை பாடிக் கொண்டிருக்கிறார்கள் லாஸ்லியா ஆர்மிக்காரர்கள்.

வெட்டி

லாஸ்லியா ஆர்மி அவரை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் அவரை விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். சாப்பிடுவது, தூங்குவது, பசங்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவது, வேடிக்கை பார்ப்பது. இதை தவிர வேறு எதுவும் செய்யாத லாஸ்லியாவுக்கு எல்லாம் ஆர்மி ஒரு கேடா என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

பொறாமை

லாஸ்லியாவை பற்றி தப்புத் தப்பாக ட்வீட் போடுவது எல்லாம் இந்த ஓவியா ஆர்மிக்காரர்கள் தான். அவர்களுக்கு லாஸ்லியாவை பார்த்து பொறாமையாக உள்ளது. ஓவியா நடித்து எந்த படமும் ஓடியது இல்லை என்று லாஸ்லியா ஆதரவாளர்கள் பதிலுக்கு விளாசியுள்ளனர்.

ரித்விகா

ரித்விகா

லாஸ்லியா ஓவியா, ரித்விகா போன்று நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைசி வரை வேடிக்கை மட்டும் பார்த்து, இருக்கும் இடம் தெரியாமல் இருந்து ரித்விகா போன்று டைட்டிலை வெல்ல திட்டமிட்டுள்ளார் லாஸ்லியா என்கிறார்கள் நெட்டிசன்கள். இதை பார்த்து ரித்விகாவின் ஆதரவாளர்கள் நிச்சயம் கடுப்பாவார்கள். லாஸ்லியா அழகாக இருப்பதை தான் அவரின் ஆர்மிக்காரர்களே கொண்டாடுகிறார்கள். மற்றபடி அவர் ஒன்றும் செய்யவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X