twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறுபடியும் முதலில் இருந்தா அபிராமி?: போய் வேறு வேலையை பாரும்மா

    By Siva
    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Day 15 : Promo 1: கவின்- சாக்ஷி காதலில் விரிசல்?

    சென்னை: அபிராமி சாக்ஷியிடம் மதுமிதா பற்றி புறம் பேசிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் அபிராமி, மீரா மிதுன், சாக்ஷி அகர்வால், கவின் ஆகியோரை பார்த்தாலே எரிச்சல் தான் வருகிறது. இந்நிலையில் மதுமிதா ஆரம்பித்து வைத்த தமிழ் பொண்ணு, மண்ணு, கலாச்சார விவகாரத்தை மறுபடியும் பேசுகிறார் அபிராமி.

    ஏதோ நான் தான் பெரிய ஆளு என்பது போன்று அபிராமி பேசிக் கொண்டிருக்கிறார்.

    6 மணிக்கு டிவிட்டர் அலறும்.. பேஸ்புக் கதறும்.. யூட்யூப் மலரும்.. என்னவா இருக்கும்? மரண வெய்ட்டிங்! 6 மணிக்கு டிவிட்டர் அலறும்.. பேஸ்புக் கதறும்.. யூட்யூப் மலரும்.. என்னவா இருக்கும்? மரண வெய்ட்டிங்!

    அபிராமி

    காலையில் வெளியான ப்ரொமோ வீடியோவில் கவின் சாக்ஷியை மச்சான், மச்சான் என்று கூறி பார்வையாளர்களை கடுப்பேற்றினார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அபிராமியும் சாக்ஷியை மச்சான் என்கிறார். எந்த வகையில் சாக்ஷி உங்களுக்கு எல்லாம் மச்சான் என்று கேட்டு சிரிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

    மதுமிதா

    அபிராமி, சாக்ஷி உள்ளிட்டோர் மதுமிதாவை டார்கெட் செய்யச் செய்ய அவருக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அதற்காக மதுமிதாவை அனைவருக்கும் பிடித்திருக்கு என்று சொல்லவில்லை. அவர் போலியாக நடிப்பதாகவும் சிலர் பேசுகிறார்கள். இத்தனை வில்லிகளுக்கு நடுவே மதுமிதா தைரியமாக இருப்பதை தான் பார்வையாளர்கள் பாராட்டுகிறார்கள்.

    தமிழ் பொண்ணு

    மதுமிதா ஒரேயொரு முறை தான் தமிழ் பொண்ணு, கலாச்சாரம் என்றார். ஆனால் இந்த அபிராமி உள்ளிட்டவர்களோ அதையே திருப்பித் திருப்பி கூறுகிறார்கள். அபிராமி மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்துள்ளதை பார்த்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஆசையே போய்விடுகிறது. போதும்மா அபிராமி, வேறு ஏதாவது வேலை இருந்தால் போய் பாருங்க.

    வனிதா விஜயகுமார்

    இன்று வெளியான ப்ரொமோ வீடியோக்களில் வனிதா விஜயகுமாரை காணவில்லையாம். அதற்குத் தான் இந்த கூப்பாடு. அக்காவை என்ன செஞ்சீங்க என்பதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலையாங்கண்ணே. வனிதாவை ப்ரொமோ வீடியோவில் காட்டினால் கெட்ட வார்த்தையால் திட்டுவது, அவரை காட்டாவிட்டால் அக்காவுக்கு என்னடா ஆச்சு, காணோம் என்று ஓவர் பில்ட்அப் கொடுப்பது. நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.

    English summary
    Bigg Boss 3 contestant Abhirami is talking about Tamil culture issue raised by Madhumitha earlier.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X