பிக் பாஸ் 3: ஓவியாவின் தோழியான சர்ச்சை நடிகை போட்டியாளர் ஆகிறார்.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ கோபிகா கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

By Staff

சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் ஓவியாவின் தோழியான நடிகை ஸ்ரீ கோபிகா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமோக்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இம்முறை இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறவர்கள் இவர்கள் தான் என பலரது பெயர் தினந்தோறும் செய்திகளில் அடிபட்டு வருகிறது.

bigg boss 3 oviya friend is a contestant

அந்தவகையில் தற்போது நடிகை ஸ்ரீ கோபிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ கோபிகா பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த 90 எம் எல் படத்தில் ஓவியாவின் தோழியாக, ஐந்து பெண்களில் ஒருவராக நடித்தவர். இப்படத்தில் முகத்தை சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகள் மற்றும் வசனங்கள் நிறைந்து இருந்ததால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. அப்படம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் அப்படம் நடித்திருந்த ஸ்ரீ கோபிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறார் என்ற தகவல் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சீசனில் யாஷிகா கவர்ச்சியாக உடை அணிந்து பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தார். அந்த வகையில் இந்த சீசனில் ஸ்ரீ கோபிகாவும் அதே போன்று நடந்து கொள்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X