பிக் பாஸ் 3:இனி ‘அங்க’ உட்காந்து யாரும் ஒப்பாரி வைக்க முடியாது.. மருத்துவ முத்தத்துக்கும் நோ சான்ஸ்

பிக் பாஸ் வீட்டில் புகைப் பிடிக்கும் அறையின் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

By Staff

Recommended Video

Bigg Boss Season 3: வித்யாசமாக அமைக்கப்பட்ட பிக் பாஸ் 3 புகைபிடிக்கும் அறை- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இம்முறை புகைப் பிடிக்கும் அறையை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்கு வரும் பிரபலங்களில் பலர் புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்பது நமக்கு முதல் சீசனில் இருந்தே தெரிந்தது தான். அதனாலேயே பிக் பாஸ் வீட்டில் புகை பிடிப்பதற்கு என ஸ்மோக்கிங் ரூம் என்ற பெயரில் தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் சீசனில் இது பாத்ரூம் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், புகை பாத்ரூம் முழுவதும் சுற்றும் என்பதாலோ என்னவோ, அடுத்த சீசனில் வாசலுக்கு அருகே அந்த அறை அமைக்கப் பட்டது.

புறணி பேசும் அறை:

புறணி பேசும் அறை:

இதனால் பெரும்பாலும் புகை பிடிக்கும் அறை ஒரு சில போட்டியாளர்களுக்கு புறணி பேசுவதற்கும், அழுது புலம்புவதற்கும் ஏற்ற இடமாக மாறியது. மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியாமல் அந்த அறைக்குள் புகுந்து கொண்டு அவர்கள் அழுது புலம்பினர். குறிப்பாக கடந்த சீசனில் ஐஸ்வர்யா, யாஷிகாவின் முக்கிய புறணி பேசும் இடமாக அது இருந்தது.

ரொமான்ஸ்:

ரொமான்ஸ்:

இதே போல், முதல் சீசனில் ஆரவ், ஓவியாவிற்கு இந்த அறையில் வைத்து தான் மருத்துவ முத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. அந்த அறையில் ஒரு கேமரா இருந்தது நினைவுக்கூரத்தக்கது. இதனால் காதல் ஜோடிகளின் ரகசிய சந்திப்பு இடமாகவும் அது இருந்தது.

அமைப்பு மாற்றம்:

அமைப்பு மாற்றம்:

ஆனால், இம்முறை புகைப் பிடிக்கும் அறையில் மேற்கூறியவாறெல்லாம் செய்ய முடியாது. பிக் பாஸ் அதற்கும் செக் வைத்து விட்டார். இம்முறை, புகை பிடிக்கும் அறையை சிறிய புகை போக்கி போன்ற வடிவில் உருவாக்கியுள்ளனர். பழங்கால முறையில் அமைக்கப்பட்டுள்ள அந்த அறைக்கு கீழே குனிந்து தான் செல்ல வேண்டும்.

புகை சூழ் அறை:

புகை சூழ் அறை:

அதே போல், ஒரே சமயத்தில் அந்த அறைக்குள் இருவர் நிற்பதே கஷ்டம் தான். மேலும் புகையும் கீழ்ப்புறம் தான் வெளியேறும் என்பதால், நீண்ட நேரம் அதற்குள் போட்டியாளர்கள் நிற்க இயலாது. வேகவேகமாக போன வேலையை முடித்துக் கொண்டு கிளம்பத்தான் நேரம் சரியாக இருக்கும்.

எல்லாம் நன்மைக்கே:

எல்லாம் நன்மைக்கே:

பிக் பாஸின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது தான். ஏனெனில் இப்படியான நெருக்கடியான சூழலில் புகைப் பிடிக்க இயலாமல், 100 நாட்கள் அங்கேயே தங்கி இருக்கும் போட்டியாளர்கள் சிலர் மனம் மாறி புகைப் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடவும் வாய்ப்புகள் அதிகம். பிக் பாஸ் அதனை யோசித்து தான் இப்படி ஒரு அமைப்பை வைத்திருப்பார் என நம்புவோம். நம்பிக்கைத்தானே வாழ்க்கை பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X