twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்

    By Siva
    |

    ஹைதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நடிகர் நாகர்ஜுனாவின் வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் இன்று துவங்குகிறது. அந்த நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்வேதா ரெட்டி, காயத்ரி குப்தா ஆகியோரை அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியுள்ளனர்.

    Bigg Boss 3: Students protest infront of Nagarjunas house

    இது குறித்து அவர்கள் இருவரும் புகார் தெரிவித்தனர். உங்களால் 100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா, உங்களை போட்டியாளர் ஆக்கினால் பாஸை எப்படி இம்பிரஸ் செய்வீர்கள் என்றெல்லாம் காயத்ரி குப்தாவிடம் கேட்டுள்ளனர். அந்த பாஸ் யார் என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.

    2 பெண்கள் புகார் தெரிவித்தும் நாகர்ஜுனா அமைதியாக உள்ளார். இந்நிலையில் அவர் ஏன் அமைதியாக உள்ளார் என்று கேட்டும், நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரியும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நாகர்ஜுனாவின் வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அறிந்த ஜுபிளி ஹில்ஸ் போலீசார் விரைந்து வந்து மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். பெண்களை அவமதிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாகர்ஜுனா எப்படி ஒப்புக் கொண்டார் என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    முன்னதாக ஸ்வேதா ரெட்டி மற்றும் காயத்ரி குப்தா ஆகியோர் அளித்த புகாரின்பேரில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்பட்டதாக அந்த 2 பெண்களும் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி வழக்கறிஞர் கே. ஜெகதீஷ்வர் ரெட்டி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

    பிக் பாஸ் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள், நான் ஏதாவது சொல்லிவிடப் போகிறேன். அது மோசமான நிகழ்ச்சி என்று தெரிவித்த நாகர்ஜுனா தற்போது அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

    பணம் கொடுத்தால் எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் தொகுத்து வழங்குவீர்களா நாக் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    English summary
    Osmania university students protested in front of actor Nagarjuna's house seeking ban on Telugu Bigg Boss 3.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X