பிக் பாஸ் 3: பர்ஸ்ட் ஒன்சைட்.. அடுத்து டபுள்சைட்.. இப்போ கவின் - அபியை வச்சு வேற லெவல் பிளான்!
கவின் - அபிராமியை வைத்து இந்த சீசனை பரபரப்பாக்க பிக் பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை: பிக் பாஸ் ஆரம்பித்த ஒரே நாளில் வழக்கம் போல் காதல் கதையை ஆரம்பித்து விட்டது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. கடந்த சீசன்களில் இருந்தது போலவே நிச்சயம் இதிலும் காதல் பறவைகள் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். அதனை நிரூபிப்பது போல், இம்முறை திருமணமாகாத இளைஞர்கள், இளைஞிகள் நிறைய பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
எனவே, நிச்சயம் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்கள் பிக் பாஸ் வீட்டில் உருவாகலாம் எனத் தெரிகிறது. முதல் நாளான நேற்று அபிராமி, கவின் மீது தனக்கு கிரஷ் இருப்பதாகக் கூறி இருக்கிறார். இனி வரும் நாட்களில் அவர் தன் காதலை கவினிடம் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். ஆனால் அக்காதலை கவின் ஏற்றுக் கொள்வாரா என்பது தான் இங்கே மிகப்பெரிய கேள்வி.

ஓவியா - ஆரவ்
முதல் சீசனில் ஆரவ்வைக் காதலித்தார் ஓவியா. முதலில் அவரும் சம்மதம் என்பது போல் தான் நடந்து கொண்டார். மருத்துவ முத்தம் கூட கொடுத்தார். ஆனால், திடீரென ஜகா வாங்கினார். இதனால் ஒருதலைக் காதலோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா. டைட்டிலை வாங்கிக் கொண்டு வெற்றியாளர் ஆனார் ஆரவ்.

மஹத் - யாஷிகா
இரண்டாவது சீசனில் மஹத்தும், யாஷிகாவும் காதலித்தனர். முதலில் யாஷிகா தான் தன் காதலை வெளிப்படையாகச் சொன்னார். ஆரம்பத்தில் அதனை மறுத்த மஹத், ஒரு கட்டத்தில் தானும் காதலில் விழுந்ததை ஒப்புக் கொண்டார். இதனால் அவரது காதலி பிராச்சி கோபம் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், அவரை மஹத் சமாதானப் படுத்தியதும், தற்போது அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதும் நாமறிந்த கதை தான்.

அபிராமி - கவின் கிரஷ்
இந்தச் சூழ்நிலையில் தான் மூன்றாவது சீசனில் அபிராமி, கவின் மீது தனக்கு கிரஷ் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சாக்ஷியுடன் தான் கவின் சுற்றி வருகிறார். அவருடன் தான் அதிகம் பேசுகிறார். அவர் அருகில் தான் அமர்கிறார். இதன் மூலம் கவின் மனதில் சாக்ஷி இருக்கலாம் எனத் தெரிகிறது.

என்ன டிவிஸ்ட்?
எனவே இம்முறை அபி கவினைக் காதலிக்க, கவின் சாக்ஷியைக் காதலிக்க, சாக்ஷி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதில் தான் பிக் பாஸ் டிவிஸ்ட் வைப்பார் எனத் தெரிகிறது. முதல் சீசனில் ஒருதலைக் காதல், இரண்டாவது சீசனில் இருவரும் காதல், இதன் அடிப்படையில் பார்த்தால் மூன்றாவது சீசனில் முக்கோணக் காதலைத் தான் பிக் பாஸ் திரைக்கதையாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











