பிக் பாஸ் 3: அய்யய்யோ... அபிராமிக்கு இப்படி ஒரு பிரச்சினையா?... உண்மையை வெளியே சொன்ன பாத்திமா பாபு!
பிக் பாஸ் வீட்டில் உள்ள அபிராமி நார்மலாகவே இல்லை என பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அபிராமியை பற்றிய ரகசியத்தை உடைத்து மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார் கடந்த வாரம் எலிமினேட் ஆன பாத்திமா பாபு.
பிக் பாஸ் வீட்டிற்குள் போன வேகத்தில் முதல் ஆளாக வெளியே வந்திருக்கிறார் பாத்திமா பாபு. பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதை அறிய, ஒட்டுமொத்த மீடியாக்களும் பாத்திமா பாபு வீட்டின் முன்பு தான் கூடாரம் அமைத்திருக்கின்றன.
ஒரு இணையதள ஊடகத்திடம் வாய் மலர்ந்திருக்கிறார் அவர்.

பாத்திமா கொடுத்த ஷாக்
பாத்திமா பாபு வெளியிட்ட விஷயங்களில் மிகவும் முக்கியமானது, அபிராமியை பற்றியது. அதாவது முதல் நாளில் இருந்தே அபிராமியின் நடவடிக்கைகள் நார்மலாக இல்லையாம். தனது நகத்தை வைத்து தன்னை தானே கீறிக்கொண்டாராம். மேலும் தான் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என திடீர் திடீர் என்று அழுது புலம்புகிறாராம்.

அபிராமி சரியில்லை
பாத்திமா பாபு எத்தனையோ முறை அபிராமியை சமாதானப்படுத்தி இருக்கிறாராம். மனநல மருத்துவர் வந்து கவுன்சிலிங் கொடுத்தப் பிறகு தான் சரியாகி இருக்கிறார். அதுவும் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் வழக்கம் போல ஆரம்பித்துவிட்டார் என்கிறார் பாத்திமா பாபு.

முதல் நாளில் இருந்தே
முதல் நாள் உள்ளே நுழைந்ததும் பசி பசி என அழைந்தார் அபிராமி. பிறகு அன்றைய தினமே கவினை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்த நாளே முகினுக்கும், தனக்கும் பிறந்த குழந்தை என ஒரு வாட்டர் பாட்டிலை வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்தார். இதை பற்றி பேசப்போக தான் மதுமிதாவுக்கு அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

கேப்டனாக தேர்வு
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக தேர்வாகி இருக்கிறார் அபிராமி. முதல் நாளே அவருக்கும் வனிதாவுக்கு மோதல் ஆரம்பமாகிவிட்டது. சண்டக்கோழியாக வீட்டில் சுற்றி வரும் வனிதாவிடம் அபிராமி மாட்டிக்கொள்வாரா? அல்லது ஒருநிலையில் இல்லாத அபிராமியிடம் ஹவுஸ்மேட்ஸ் சிக்கப்போகிறார்களா என பார்வையாளர் யோசித்துக்கொண்டிருக்கும் வேலையில், அபிராமி பற்றிய பாத்திமா பாபு கருத்து மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











