பிக் பாஸ் 3 : அபிராமி காதல் விவகாரம்.. கவினை ‘பீப்’ வார்த்தையால் திட்டிய நடிகர்.. ஏன் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் உள்ள கவினை அவரது நண்பர் அசிங்கமாக திட்டி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள கவினை அவரது நண்பர் அசிங்கமாக திட்டி வெளியிட்ட பேஸ்புக் பதிவு வைரலாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் கவின். அங்குள்ள மூன்று இளைஞர்களில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் அவர் தான். காரணம் அவர் ஏற்கனவே சரவணன் மீனாட்சி மற்றும் நட்புனா என்னனு தெரியுமா என சீரியல் மற்றும் படம் மூலம் மக்களிடையே அறிமுகமானவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில், கவினை காதலிப்பதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார் அபிராமி. அதெப்படி கண்டதும் காதல் என அபிராமியை ஏற்கனவே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அபிராமி விவகாரம்
அபிராமி விவகாரத்தில் ஆரவ், மஹத் போல் இல்லாமல் கவின் நிதானமாக, சாமர்த்தியமாக நடந்து கொள்வதாகவும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். தனது ஜாலியான பேச்சால் மக்களிடம் கவினுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

பிரதீப் ஆண்டனி
இந்நிலையில், கவினின் நெருங்கிய நண்பரும், நடிகருமான பிரதீப் ஆண்டனி தனது பேஸ்புக் பக்கத்தில் கவினை திட்டி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘யாரும் கவினிற்கு ஓட்டு போடவேண்டாம் அவனை வெளியே கொண்டு வாங்க' என கோரிக்கை விடுத்திருந்தார். கூடவே சில கெட்ட வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தி இருந்தார்.

அவசரமாக நீக்கம்
இந்த பதிவு பெரிய அளவில் வைரலாகியுள்ளது. பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியதை அடுத்து, அவசர அவசரமாக அந்தப் பதிவை ஆண்டனி நீக்கிவிட்டார். அருவி படத்தில் "பீட்டர்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த பதிவு?
ஆண்டனி ஏன் இப்படி ஒரு பதிவை வெளியிட்டார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால், கமெண்டில் சில நண்பர்கள், ‘புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது' எனப் பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் விளையாட்டிற்காக அப்படி ஒரு பதிவை அவர் வெளியிட்டாரா அல்லது நிஜமாகவே கோபமாக வெளியிட்டாரா என்பது தெரியவில்லை. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எலிமினேசன் எதுவும் இருக்காது என கூறியுள்ள நிலையில், ஆண்டனியின் இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











