“வனிதா என்னை கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கச் சொன்னார்”.. 3வது கணவர் சர்ச்சை பற்றி ராபர்ட் விளக்கம்!

தான் வனிதாவின் 3வது கணவர் இல்லை என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரபல நடன இயக்குநர் ராபர்ட்.

Recommended Video

Bigg Boss 3 Tamil:இப்படி ஒரு ராட்சசி என் வயித்துல எப்படி பொறந்தா

சென்னை: பிக் பாஸ் வனிதாவிற்கு தான் மூன்றாவது கணவரா என்பது குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார் பிரபல நடன இயக்குநர் ராபர்ட்.

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருப்பவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், தமிழ் சினிமாவில் சந்திரலேகா படம் மூலம் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்கள் நடித்த வனிதா, 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸ்ரீகரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.

பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, தெலுங்கானாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்தராஜை கடந்த 2007ம் ஆண்டு மறுமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெனிதா என்ற மகள் இருக்கிறார். கடந்த 2012ம் ஆண்டு ஆனந்தராஜையும் வனிதா விவாகரத்து செய்தார்.

3வது திருமணம்:

3வது திருமணம்:

கணவரைப் பிரிந்த வனிதா, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தைத் தயாரித்து நடித்தார். இப்படத்தில் பிரபல நடன இயக்குநர் ராபர்ட் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்த போது, ராபர்ட்டைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார் வனிதா. இதனால் வனிதாவின் மூன்றாவது கணவர் ராபர்ட் தான் என செய்திகள் வெளியானது.

ராபர்ட் விளக்கம்:

ராபர்ட் விளக்கம்:

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் வனிதா சண்டைக்கோழியாக மாறி பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் கண்டெண்ட் கொடுத்து வருகிறார். இதனால் வனிதாவைப் பற்றிய செய்திகளில் அவரது மூன்றாவது கணவர் ராபர்ட் என மீண்டும் அடிபடத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ராபர்ட் விளக்கமளித்துள்ளார்.

பட புரோமோசனுக்காக:

பட புரோமோசனுக்காக:

அதில் அவர், ‘அவருடன் ஒரு படத்தை இணைந்து தயாரித்துள்ளேன். அவர் தயாரிப்பாளர். நான் இயக்குநர். ஆதாரம் இல்லாமல் என்னை அவரது 3 -வது கணவர் என்று சொல்வது மன வருத்தத்தை அளிக்கிறது. அப்படத்தை புரோமோஷன் செய்வதற்காகத் தான் அப்படி அவர் ஒரு தகவலை பரப்பினார். அதுபற்றி நான் அவரிடம் கேட்ட போது, ‘ராபர்ட் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, நம்ம படத்தின் ப்ரோமோஷனுக்காக தான்' என்று கூறினார். மற்றபடி நாங்கள் நிஜமாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை' என ராபர்ட் தெரிவித்துள்ளார்.

மறுப்பு:

மறுப்பு:

மேலும், கடந்த சீசனில் பாலாஜி, நித்யா கலந்து கொண்டது போல, இம்முறை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் உங்களையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, "அம்மா மேல் சத்தியமாக நான் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

மக்கள் அதிர்ச்சி:

மக்கள் அதிர்ச்சி:

பட விளம்பரத்திற்காக இந்த அளவிற்கு வனிதா செய்வாரா என ராபர்ட்டின் இந்தப் பேட்டியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ராபர்ட்டின் இந்தப் பேட்டி பொய்யானது என்றும் நெட்டிசன்கள் சிலர் வாதிட்டு வருகின்றனர். ராபர்ட் வனிதாவின் பெயரைக் கையில் பச்சை குத்தி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X