twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல".. ஜூலியோடு மதுமிதாவை கம்பேர் பண்ணும் நெட்டிசன்கள்!

    பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து இணையத்தில் உலா வரும் சில மீம்ஸ்கள்.

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Unseen Sandy Attrocities : முன்னணி நடிகரை இமிடேட் செய்யும் சாண்டி- வீடியோ

    சென்னை: பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி பற்றிய மீம்ஸ்கள் தான் சமூக வலைதளங்களை கலக்கிக்கொண்டிருக்கின்றன.

    ஊரெங்கும் ஒரே பேச்சு, வீடெங்கும் ஒரே காட்சி என்றால் அது பிக் பாஸ் தான். தன்னை பற்றி பேசாத ஆளே இல்லை எனும் அளவுக்கு டிஆர்பியை எகிற வைத்துக்கொண்டு இருக்கிறார் நம்ம பிக் பாஸ். டிஆர்பியை மட்டும் தானா... பார்ப்பவரின் பிபியையும் (BP) தான் எகிற வைக்கிறார்.

    பிரபலங்கள் தும்மல் போட்டாலே மீம்ஸ் போடும் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள், ஊரே பேசும் பிக் பாஸை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? இதோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

    ஒன்னுத்துக்கு ஒன்னு சலிச்சது இல்ல

    ஒன்னுத்துக்கு ஒன்னு சலிச்சது இல்ல

    இந்த சீசன் போட்டியாளர்களில் அதிரடியாக பல விஷயங்களை செய்து பிக் பாஸ் வீட்டில் அனல் கிளப்பி வருகிறவர் மதுமிதா. நம்ம தேனடையை ஜூலியுடன் ஒப்பிட்டு, "ஒண்ணுக்கு ஒண்ணு சலிச்சது இல்ல", என ஒரு அன்பர் மீமியிருக்கிறார். இதற்கு செம ரெஸ்பான்ஸ்.

    வாங்குன காசுக்கு மேல நடிக்கிறாங்க

    வாங்குன காசுக்கு மேல நடிக்கிறாங்க

    நேற்றைய லக்சுரி டாஸ்கில் மதுமிதாவுக்கு கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி வேடம் கொடுக்கப்பட்டது. இதற்கு தானோ ஆசைப்பட்டாய் மனோகரா படத்தில் நடித்த அனுபத்தைக் கொண்டு, சிறப்பாக நடித்தார். ஆனால் அதை கலாய்க்கும் வகையில், "வாங்குன காசுக்கு மேல நடிக்கிறாங்க டா", என வடிவேலு சொல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த மீம்ஸ்.

    மாஸ் காட்டும் சாண்டி

    மாஸ் காட்டும் சாண்டி

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் கலகலப்புக்கு கேரண்டி தந்துகொண்டிருப்பவர் சாண்டி மாஸ்டர். எந்த கெட்டப் கொடுத்தாலும் மாஸ் காட்டுகிறார். அதை பாராட்டும் வகையில், 'யார் சாமி இவன்... எந்த கெட்டப் போட்டாலும் மாஸ் பண்றான்", என பீமா பட பிரகாஷ்ராஜ் ஸ்டில்லை போட்டு ஆச்சரியப்பட்டுள்ளார் ஒருவர்.

    கணேஷ் வெங்கட்ராமும் லாஸ்லியாவும்

    கணேஷ் வெங்கட்ராமும் லாஸ்லியாவும்

    பிக் வீட்டில் உள்ள லாஸ்லியாவுக்கு, உள்ளேயும் சரி, வெளியேவும் சரி ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. யார் வம்புதும்புக்கும் போகாமல், புறணி பேசாமல், இருக்கும் லாஸ்லியாவை, முதல் சீசன் போட்டியாளர் ஜெண்டில்மேன் கணேஷ் வெங்கட்ராமுடன் ஒப்பிட்டு மீமியிருக்கிறார்கள். "எந்த காரணமும் இல்லாமல் மக்கள் இவர்கள் இரண்டு பேரையும் வெறுக்கிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் நல்லவர்கள் என்பதை தொடர்ந்து நிரூபிப்பார்கள்", என எமோசனலாக கதைக்கிறது இந்த மீம்.

    English summary
    Lots of memes are circulating on bigg boss 3 tamil, which are rocking social media platforms.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X