Bigg boss 3: 'இவங்க' எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு போறாங்களா... அப்ப கச்சேரி களைக்கட்டுமே!

காமெடி நடிகர் மயில்சாமி, பாத்திமா பாபு, விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் எனக் கூறப்படுகிறது.

சென்னை: பிக் பாஸ் 3 தமிழில் இந்த முறை யார் எல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் யார் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தான் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. நாளை ஒளிப்பரப்பாக உள்ள தொடக்க விழாவின் படப்பிடிப்பு நேற்று மாலையே முடிந்துவிட்டது. எனவே போட்டியாளர்கள் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளது.

காமெடியன் மயில்சாமி

காமெடியன் மயில்சாமி

ஒவ்வொரு முறையும் ஒரு சீனயர் நடிகர் பிக் பாஸ் போட்டியாளராக இருப்பார். முதல் சீசனில் வையாபுரியும், இரண்டாவது சீசனில் பொன்னப்பலமும் இடம்பெற்றனர். இந்தமுறை அந்த இடத்தில், காமெடி நடிகர் மயில்சாமி போட்டியாளர் ஆகியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகை பாத்திமா பாபு

நடிகை பாத்திமா பாபு

ஆண்களில் எப்படி ஒரு சீனியர் நடிகர் இடம்பெறுவாரோ, அதே போல் தான் பெண்களிலும் ஒரு சீனியர் நடிகை இடம்பெறுவார். முதல் சீசனில் காயத்ரி ரகுராமும், இரண்டாவது சீசனில் மும்தாஜும் பங்கேற்றனர். அந்த வகையில் இந்த சீசனில் அவர்களிடைய இடத்தில் அமர்ந்திருப்பது பாத்திமா பாபு என்பது தெரியவந்துள்ளது.

விஜய் டிவி ராமர்

விஜய் டிவி ராமர்

சென்ற முறை விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர். இம்முறை தாடி பாலாஜி இடத்தில் நகைச்சுவை நடிகர் ராமர் பங்கேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மற்ற போட்டியாளர்கள்

மற்ற போட்டியாளர்கள்

இவர்களை தவிர, இயக்குன் சேரன், பருத்திவீரன் சரவணன், கவின், வணிதா விஜயகுமார், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன. ஆனால் இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X