மகள் கடத்தல், போலீஸ், கைது.. வனிதாவால் பிக் பாஸ் வீடு களேபரமாக மாற கமல் தான் காரணமா?

பிக் பாஸ் வீட்டில் வனிதாவால் இவ்வளவு களேபரங்கள் நடைபெற கமல் கலந்து கொண்ட துவக்கவிழா தான் காரணமாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Vanitha : பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக குழந்தையை கடத்திய வனிதா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு போலீஸ் வந்து வனிதாவை விசாரித்ததன் பின்னணியில் மறைமுகமாக கமல் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வனிதாவை விசாரணை செய்ய நேற்று தெலுங்கானா போலீசார் செட்டிற்குள் சென்றிருந்தனர். அப்போது உதவிக்கு தமிழக போலீசாரும் சென்றிருந்தனர். தன் மகளைக் கடத்தி விட்டதாக வனிதாவின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் வனிதா பள்ளி சென்ற தன் மகளை தனக்கு தெரியாமல் அழைத்துக் கொண்டு சென்னை வந்து விட்டதாக அப்புகாரில் அவர் தெரிவித்திருந்தார். பிப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவம் பற்றி இப்போது கைது வரை சென்றது ஏன் என்ற கேள்வி மக்களிடையே இருந்தது. ஏன் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அவரைக் கைது செய்ய போலீஸ் முயற்சித்தது என்பது தான் அவர்களது சந்தேகம்.

திடீரென வனிதா மீது இப்படி அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட காரணம், கமல் கலந்து கொண்ட பிக் பாஸ் துவக்க விழா நிகழ்ச்சி தான். வனிதா விவகாரத்திற்கும், கமலுக்கும் என்ன தொடர்பு என குழப்பமாக இருக்கிறதா? இதோ விரிவாகவே பார்க்கலாம்.

 இதுதான் பிரச்சினை:

இதுதான் பிரச்சினை:

கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுடன் விவாகரத்தான பின் தன் மகள் ஜெயந்திகாவுடன், தெலுங்கானாவில் உள்ள சைபராபாத் மாவட்டத்தில் வசித்து வந்தார் ஆனந்தராஜ். அங்கிருந்து தான் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி தன் மகளை சென்னைக்கு அழைத்து வந்தார் வனிதா. இது தொடர்பாக அப்போதே சைபராபாத்திலும், சென்னையிலும் ஆனந்தராஜ் போலீசில் புகார் அளித்தார். அதில் தன் மகளை மீட்டுத் தரும்படி அவர் கேட்டிருந்தார்.

போலீஸ் விசாரணை:

போலீஸ் விசாரணை:

இந்தப் புகார் தொடர்பாக மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், வனிதா எங்கிருக்கிறார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், பிக் பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக கடந்த மாதம் 23ம் தேதி களமிறங்கினார் வனிதா.

கமலுடன் மகள்கள்:

கமலுடன் மகள்கள்:

பிக் பாஸ் தொடக்க விழா நிகழ்ச்சி விஜய் டிவியிலும் ஒளிபரப்பானது. அப்போது, விழா மேடையில் கமலிடம் தனது இரு மகள்களையும் அழைத்து அறிமுகப்படுத்தினார் வனிதா. அதோடு, வனிதா பற்றிய அறிமுகக் குறும்படத்திலும் அவரது மகள்கள் இருந்தனர். இவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தராஜ், சைபராபாத் போலீசாரிடம் மீண்டும் புகார் அளித்தார்.

கைது வாரண்ட்:

கைது வாரண்ட்:

அந்தப் புகாரின் அடிப்படையில் வனிதா மீது ஐபிசி பிரிவு 363ன் கீழ் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாரண்ட் பெறப்பட்டது. அந்த வாரண்டுடன் தான் தெலுங்கானா போலீசார் சென்னை வந்தனர். பின் சென்னை போலீஸ் உதவியுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று விசாரணையும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ குழந்தைகள் ஆசைப் படுகிறதென்று அவர்களைக் கமல் முன்னிலையில் வனிதா அழைத்து வர, தற்போது அது அவருக்கே பிரச்சினையாகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X