“பிக் பாஸ் வீட்டில் காதல் இல்லை.. வெறும் காமம் மட்டும் தான்”.. மமதி பேட்டியால் பரபரப்பு!

பிக் பாஸ் வீட்டில் வரும் காதல்கள் பற்றி காட்டமாக விமர்சித்துள்ளார் முன்னாள் போட்டியாளரான மமதி.

Recommended Video

Bigg Boss 3 Tamil Kavin Love:கவின் செய்வது காதல் இல்லை மமதி பேட்டி

சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே வருவது உண்மையான காதல் இல்லை, அது காமம் மட்டும் தான் எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் முன்னாள் போட்டியாளரான மமதி.

பாலிவுட்டில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பானது பிக் பாஸ் முதல் சீசன். அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது. தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு சீசனிலுமே போட்டியாளர்களுக்கு இடையே மோதல் வருவது போலவே, காதலும் வருவது வாடிக்கையாகி விட்டது. முதல் சீசனில் ஓவியா-ஆரவ் காதல் பரபரப்பாக பேசப்பட்டது. பின் இரண்டாவது சீசனில் மஹத் -யாஷிகா காதல் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

காதலோ காதல்:

காதலோ காதல்:

தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் கவின், சக போட்டியாளர்களான அபிராமி, சாக்‌ஷி, ஷெரீன் மற்றும் லாஸ்லியாவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இவர்களில் கவினை அபிராமி காதலிப்பதாகக் கூறினார், பின்னர் அவர் முகென் பக்கம் கவனத்தை திருப்பி விட்டார். கவினும், சாக்‌ஷியும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக மறைமுகமாகப் பேசிக் கொண்டனர்.

கவினின் காதல்:

கவினின் காதல்:

ஆனால் பெரும்பாலும் கவின் கவனம் லாஸ்லியா பக்கம் தான் உள்ளது. கடந்த சில எபிசோட்களில் காட்டப்பட்ட காட்சிகள் மூலம் லாஸ்லியாவுக்கும் கவின் மீது காதல் வந்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால், கமல் முன்னிலையில் கவின் கூறுகையில், ‘தான் நிஜமாக யாரையும் காதலிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

மமதி விமர்சனம்:

மமதி விமர்சனம்:

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மமதி, இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘இவை உண்மையான காதல்களே இல்லை' எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிக் பாஸ் வீட்டில் வருவதெல்லாம் உண்மையான காதலே இல்லை. அது வெறும் செக்ஸ் ஆசை தான்.

சென்சார் தேவை:

சென்சார் தேவை:

கடந்த சீசனில் நீங்களே பார்த்திருப்பீர்களே அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என. அவர்கள் நடந்து கொண்ட விதத்தை முழுமையாக காண்பித்தால், பிக் பாஸ் நீலப்படமாக மாறி விடும். பிறகு குடும்பமாக அனைவரும் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியாது. லேப் டாப்பில் தனித்தனியாகத் தான் பார்க்க வேண்டும். சென்சாரும் கட்டாயமாகி விடும்.

நான்கு பெண்கள்:

நான்கு பெண்கள்:

இந்த சீசனில் கவின் நான்கு பெண்களுடனும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். நான்கு பெண்ணையும் காதலிக்கிறேன் என்கிறார். இதையெல்லாம் மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையே ஒரு பெண் செய்திருந்தால் அதற்கு அர்த்தம் வேறு' எனத் தெரிவித்துள்ளார்.

மும்தாஜ் தோழி:

மும்தாஜ் தோழி:

பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட மமதி, முதல் போட்டியாளராக வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மும்தாஜும் அவரும் நெருங்கிய தோழிகளாகி இருக்கின்றனர். தற்போதும் அவர்கள் இருவரும் தோழிகளாக வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X