Just In
- 13 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 19 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 2 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
- 2 hrs ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
Don't Miss!
- Sports
இந்தியா இதை மட்டும் செஞ்சா போதும்.. இந்த மேட்ச்சும் போச்சு.. கதிகலங்கிய ஆஸி.!
- News
தேனி ராஜா.. ஆசைப்பட்ட தமிழரசி.. உப்புக்கோட்டைக்கு சிட்டாய் பறந்து வந்து.. அங்க பாருங்க ஒரு டிவிஸ்ட்!
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Lifestyle
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“அது வேற இது வேற வனிதா மேடம்”.. கடும் கோபத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் போட்ட டிவீட்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் வனிதா பேசியது தொடர்பாக, முன்னாள் போட்டியாளரான காஜல் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நேற்று மதுமிதாவுக்கும், அபி மற்றும் ஷெரீனுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை நடைபெற்றது. தமிழ்ப் பொண்ணு, கலாச்சாரம் என்ற வார்த்தையைக் கூறியதால் மதுவுக்கு எதிராக அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்தனர். அதனால் கடும் வாக்குவாதம் நடந்தது.
தன் நிலையை விளக்க மது மிகவும் முயற்சி செய்தார். ஆனால், அவர் வாயை அடைக்கும்படி சக போட்டியாளர்கள் பல்வேறு கேள்விகளை அவர்மீது தொடுத்தனர்.
சொந்த அப்பாவா இருந்தாலும் பிக் பாஸ் அப்பாவா இருந்தாலும் நான் ஆப்பு தான் வைப்பேன்.. வனிதா!

சினிமா மாதிரி:
அப்போது வனிதா, ‘நீ சினிமாவுல கவர்ச்சியாக நடிக்க கேட்டால் நடிக்க மாட்டாயா. அது போல தான் இதுவும்" எனக் கூறினார். அது சினிமா, இது வாழ்க்கை என மது பதிலுக்கு கூறினார். ஆனாலும் அதனை வனிதா காதில் போட்டுக் கொள்ளவில்லை. ரெண்டும் ஒன்று தான் எனப் பேச்சை முடித்தார்.
|
காஜல் கோபம்:
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், தற்போதைய போட்டியாளரான சாண்டியின் முதல் மனைவியுமான காஜல் பசுபதி கடும் கோபத்துடன் ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நடிப்புக்கும், ரியல் லைபுஃக்கும் வித்தியாசம் இருக்கு வனிதா மேடம்" என அவர் கூறியுள்ளார்.
|
ரித்விகாவுக்கு மட்டும் ஆதரவா?
அதோடு, ‘கடந்த சீசனில் ரித்விகா இதே போல், தமிழ்ப் பொண்ணு பற்றி பேசியபோது யாரும் கோபப்படவில்லை. காரணம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. இப்போது மதுவுக்கு எதிராக மட்டும் அனைத்துப் போட்டியாளர்களும் இப்படி பொங்குகிறீர்களே' என காஜல் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
நாமினேசன்:
கூடவே ‘நேற்று தான் சேரனுக்கு இதயம் கொடுத்தீர்கள். இன்று நாமினேட் செய்து விட்டீர்களே' என வனிதாவின் செயலை அவர் விமர்சித்துள்ளார். தொடர்ந்து இதே போல் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் பற்றி காஜல் டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.