“மீரா இல்லைனா கன்டெண்ட் கிடைக்காதே.. அதான் பிக் பாஸ் இந்த நாடகம் நடத்தியிருக்காரு”.. கஸ்தூரி தாக்கு
மீராவைக் காப்பாற்றத்தான் பிக் பாஸ் நாடகமாடியுள்ளார் என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
சென்னை: மீராவைக் காப்பாற்றத்தான் பிக் பாஸ் எலிமினேஷன் நாடகத்தை நடத்தி இருப்பதாக விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்று எலிமினேஷன் நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் மீராவை வெளியேற்றுவது போல் போட்டியாளர்கள் நாடகம் ஆடினர். இதனால் அவரும் உருக்கமாக அழுதார். பின்னர் அது நாடகம் என உண்மையை ஒப்புக் கொண்டனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி இது பற்றி டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், '"இந்த வாரம் பிக்பாஸில் மீரா மிதுன் தான் வாக்குகளில் பின்தங்கியுள்ளார். அவர் இல்லேனா கன்டென்ட் அடிவாங்குமே. அதனால் தான் அவர் மீது மக்கள் அனுதாப அலை வீச வேண்டும் என வேண்டுமென்றே அவரை வெளியேற்றுவது போல பிராங்க் செய்யும் டாஸ்க் கொடுக்கப் பட்டுள்ளது" என விமர்சித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. முதல் வாரம் எந்தப் போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. இந்த வாரம் தான் முதல் எவிக்சன் நடைபெற இருக்கிறது. நாமினேஷன் பிக்பாஸ் போட்டியாளர்களே செய்தாலும், வெளியேற்றப்படுவது மக்கள் போடும் ஓட்டுகள் அடிப்படையில் தான் என கூறப்படுகிறது.
இந்த வார நாமினேசன் பட்டியலில் மீரா, மதுமிதா, சேரன், கவின், சரவணன் மற்றும் பாத்திமாபாபு ஆகியோரின் பெயர் உள்ளது. இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











