சேரன் கையும் களவுமாக மாட்டிய பிறகும் டிராமா செய்து விட்டார்”.. வெளியில் வந்தும் கோபம் அடங்காத மீரா!
சேரன் கையும் களவுமாக மாட்டிய பிறகும் டிராமா செய்து விட்டார்”.. வெளியில் வந்தும் கோபம் அடங்காத மீரா!
Recommended Video
சென்னை: சேரன் கையும் களவுமாக மாட்டிய பிறகும் டிராமா செய்து விட்டதாக பிக் பாஸில் இருந்து வெளியேறிய மீரா குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களுக்குமே பிடிக்காத போட்டியாளராக வலம் வந்தவர் நடிகை மீரா மிதுன். அவரது நடவடிக்கைகள், மற்றவர்கள் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாதது, வீண் சண்டைகளை உருவாக்கியது என மீரா மிதுன் மீது மக்களிடையேயும் நல்ல பெயர் இல்லை.

எல்லாவற்றிற்கும் உச்சமாக கடந்த வாரம் சேரன் மீது அவர் பாலியல் புகார் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதனால் மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.
கமல் குறும்படம் போட்டுக் காட்டியும்கூட மீரா தன் மீதான தப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கமலுக்கே மீரா மீது கோபம் ஏற்பட்டது. ஆனால், அதனை வெளிப்படையாகக் காட்டாமல் மறைமுகமாகக் காட்டினார். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
வீட்டை விட்டு வெளியேறிய போது கூட, சேரன் மீதான பகையை மீண்டும் ஞாபகப்படுத்தினார் மீரா. இதைப் பார்த்து மக்களைப் போலவே தானும் அதிர்ச்சி அடைந்ததாக கமலே மேடையில் மீராவிடம் குறிப்பிட்டார். இது தொடர்பாக மீராவுக்கு நிறைய அறிவுரைகளையும் கமல் கூறினார். ஆனால், மீரா அவை எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு அளித்துள்ள பேட்டிகளிலும், தொடர்ந்து சேரனையே அவர் குற்றம் சாட்டி பேசியுள்ளார். 'சேரன் கையும் களவுமாக மாட்டியபிறகு, நான் பேசியதற்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு விஷயத்தை எடுத்து ட்ராமா செய்துவிட்டார். அவர் கண்ணில் கண்ணீர் கூட வரவில்லை என கவின் சொன்னான்' என மீரா கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே மீராவுக்கு எதிரான கண்டனக் குரல்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், வெளியில் வந்தும் மீண்டும் அதைப் பற்றியே பேசி மீண்டும் மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகிறார். அதோடு சைடு கேப்பில் கவினையும் அவர் இந்தப் பிரச்சினையில் கோர்த்து விட்டுள்ளார். இது கவின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











