வனிதா அளவுக்கு இல்ல.. மீரா விசயத்துல பிக் பாஸுக்கே ஏமாற்றம்தான்.. அதான் ஜெயில்ல போட்டுட்டாரு!
பிக் பாஸ் போட்டியாளர் மீராவுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருப்பவர் மீரா மிதுன். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னதாக, அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 'தன்னிடம் மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாகக்கூறி ஐம்பதாயிரம் ரூபாயை மீரா மோசடி செய்துவிட்டதாக' தெரிவித்திருந்தார்.

மீராவுக்கு சம்மன்:
இந்தப் புகார் தொடர்பாக மீராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் 19ம் தேதி (நேற்று) விசாரணைக்காக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் மீரா ஆஜராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அப்படி ஆஜராகாத பட்சத்தில் மீரா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

முன் ஜாமீன்:
ஆனால், இந்த சம்மனை அவர்கள் அனுப்பிய போது, மீரா பிக் பாஸ் வீட்டில் இருந்தார். எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விசாரணைக்கு வருவதாக மீரா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

வனிதா விவகாரம்:
இதற்கு முன்னர் மகளை கடத்தியதாக வனிதா விஜயகுமார் மீது அவரது இரண்டாவது கணவர் தொடர்ந்த வழக்கில், வனிதாவை விசாரிக்க போலீசார் பிக் பாஸ் அரங்கத்திற்குள்ளேயே சென்றனர். இதனால் வனிதா கைது செய்யப்படலாம் என பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேறி விட்டார்.

எதிர்பார்ப்பு பொய்த்தது:
எனவே, பிக் பாஸ் மீராவைக் கைது செய்ய வைத்து அடுத்த நாடகத்தை அரங்கேற்றுவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. மீராவுக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளதால், அவரை போலீசார் கைது செய்ய முடியாது. நமக்கு கண்டெண்ட் கிடைக்கவில்லையே என்ற அந்தக் கோபத்தினாலோ என்னவோ, மீராவை பிக் பாஸ் வீட்டிலுள்ள சிறையில் அடைத்து விட்டார் போலும் பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











