பிக் பாஸ் வீட்டில் வைத்து கைது செய்யப்படும் மீரா.. ஓ இது தான் உங்க மாஸ்டர் பிளானா பிக் பாஸ்?

பிக் பாஸ்3 வீட்டிற்குள் வைத்து போட்டியாளர் மீரா கைது செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

Meera Mithun: Bigg Boss 3 Tamil: மீரா மிதுன் மாடெல்லிங் என செய்த சூழ்ச்சிகள்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து மீரா கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியுள்ளது. முதல் 15 போட்டியாளர்களை கமலே அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அப்போதே இன்னும் இரண்டு போட்டியாளர்கள் வருவார்கள் என மறைமுகமாக கூறினார் கமல்.

அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளன்று, 'ஸ்டைலிஷ் தமிழச்சி'யாக அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தார் மீரா மிதுன்.

மோசடி புகார்:

மோசடி புகார்:

சமீபகாலமாக ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்ட பெயர்களில் ஒன்று மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவரான மீரா, அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது அழகிப்பட்டமும் பறிக்கப்பட்டது.

பேட்டி:

பேட்டி:

எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வந்த போது தான், அவர் அதிரடியாக பிக் பாஸ் போட்டியாளர் ஆகியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அவர் மீது போலீசில் புகார் அளித்த ஜோ மைக்கேல் பல இணையதள ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சட்டப்படி நடவடிக்கை:

சட்டப்படி நடவடிக்கை:

அப்பேட்டியில் அவர், ‘கிரிமினல் கேஸ் உள்ளவர்களை எப்படி விஜய் டிவி போட்டியாளராக தேர்வு செய்யலாம். இது அந்நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணானதாக உள்ளது. இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். நிச்சயம் டிஆர்பிக்காகத் தான் இப்படி அவர்கள் செய்துள்ளனர்.

மாஸ்டர் பிளான்:

மாஸ்டர் பிளான்:

விரைவில் பிக் பாஸ் வீட்டில் வைத்தே மீரா கைது செய்யப்படுவார். அப்போது நிச்சயம் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகும். அது அவர்களுக்கு இலவச விளம்பரம் ஆகும். அதன் மூலம் அவர்களது டிஆர்பியும் அதிகரிக்கும். மீரா மீதும் மக்களுக்கு பரிதாபம் ஏற்படும். அது அவருக்கு சாதகமாக மாறும்' என அவர் தெரிவித்துள்ளார்.

அழுகாச்சி காவியம்:

அழுகாச்சி காவியம்:

மீராவும் அதேபோல் பிக் பாஸ் வீட்டில் வைத்து கைது செய்யப்படுவார் என்கிறார் ஜோ. ஏற்கனவே வாண்டடாக பல பிரச்சினைகளில் தலையிட்டு, நிகழ்ச்சிக்கு நிறைய கண்டண்டுகள் கொடுத்து வருகிறார் மீரா. இந்த சூழ்நிலையில் அவர் கைது செய்யப்பட்டால், அப்போது மீரா ஒரு அழுகாச்சி காவியத்தை அரங்கேற்றவும் வாய்ப்புகள் அதிகம்.

எதிர்பார்க்கலாம்:

எதிர்பார்க்கலாம்:

மீரா மீது 3 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. விசாரணைக்காக போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்தார் மீரா. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது சத்தமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் அவர் போட்டியாளராகி இருக்கிறார். விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலால், வரும் நாட்களில் பிக்பாஸில் பல பரபரப்பான சம்பவங்கள் நடக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X