என்னது பிக் பாஸ் வீட்ல எம்.ஜி.ஆரா... இத்தனை நாளா இதை கவனிக்காமா விட்டுட்டோமே!

பிக் பாஸ் போட்டியாளர் முகென் தன்னைத் தானே எம்.ஜி.ஆர் என்று தான் அழைத்துக் கொள்கிறார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Actor Mugen Rao: சிட்டாய் திரிந்த முகின் சிறைக்குள் அடைந்தார்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் எம்.ஜி.ஆரும் இருப்பதை நம்மில் எத்தனை பேர் இத்தனை நாளில் கவனித்தார்கள் என்பது தெரியவில்லை.

பிக் பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இந்த வாரம் பாத்திமா பாபு வெளியேறி விட்டார். தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இவர்களில் மலேசியாவைச் சேர்ந்த முகெனும் ஒருவர். இவரது முழுப்பெயர் முகென் ராவ்.

Bigg boss 3 tamil: Mugens nick name is MGR

இப்பெயரைச் சுருக்கி, தன்னைத் தானே அவர் எம்.ஜி.ஆர் என்று தான் கூறிக் கொள்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே அப்படித்தான் தன்னை அவர் சக போட்டியாளர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், அது அப்போது மக்கள் மனதில் அவ்வளவாகப் பதியவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் சாண்டி பேச்சு மூலம் அவரது பெயர் எம்.ஜி.ஆர் என்பது மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்கள் யாரும் அவரை அப்படி அழைப்பதில்லை. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இனி அவர்களது ஆதரவு முகெனுக்கு கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அதிகம் சர்ச்சைகளில் சிக்காமல், சமத்துப் பிள்ளையாகத் தான் வலம் வருகிறார் முகென். அவரிடம் நட்பு வைத்துக் கொள்ள, அபி, மீரா மற்றும் லாஸ்லியா ஆகியோர் முயற்சித்து வருகின்றனர். முதல் சீசனில் ஆரவ் இருந்தது போலவே, அமைதியாக இருந்து கடைசியில் டைட்டிலை தட்டிச் செல்லும் வாய்ப்புக்கூட முகெனுக்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X