“கிட்னியை வித்தாவது காசு தர்றேன்.. ப்ளீஸ் மீராவை வெளியே அனுப்பிடுங்க”.. பிரபல நடிகர் ஆவேசம்
கிட்னியை வித்தாவது பணம் தருகிறேன். ப்ளீஸ் மீராவை வெளியே அனுப்பி விடுங்கள் என நடன இயக்குனர் சதீஷ் டிவீட் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: கிட்னியை வித்தாவது பணம் தருகிறேன். ப்ளீஸ் மீராவை வெளியே அனுப்பி விடுங்கள் என பிரபல நடிகர் வெளியிட்டுள்ள டிவீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்களில் மக்களிடம் அதிக வெறுப்பைச் சம்பாதித்து வருபவர் மீரா மிதுன். தொடர்ந்து அவர் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சேரன் மீது அவர் பாலியல் புகார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மீராவின் புகாரால் அவமானம் அடைந்த சேரன், கதறி அழுதார். இதனால் அவருக்கு ஆதரவாக பலர் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மீராவின் புகார்கள்:
அதோடு, மீரா இதற்கு முன் செய்த பல பிரச்சினைகளையும் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து மீராவை வெளியேற்றும்படியும் அவர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே மீரா கூறிய பாலியல் புகார்களும் வைரலாகி இருக்கிறது.
ப்ளீஸ் விஜய் டிவி:
இந்நிலையில் நடிகரும் பிரபல நடன இயக்குநருமான சதீஷும் மீராவை வெளியேற்றும்படி ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார். விஜய் டிவி வெளியிட்டுள்ள புரொமோ வீடியோவிற்கு கமென்ட்டாக அந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘மீராவை வெளியே கொண்டு வாங்க. எவ்ளோ செலவானாலும் நான் என் கிட்னிய விற்கிறேன்' என்று சதீஷ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ரசிகர்:
சதீஷின் இந்த டிவீட்டிற்கு பலரும் ஆதரவாக பதில் டிவீட் வெளியிட்டு வருகின்றனர். அதில் இவர், ‘நான் பிரான்ஸ்ல இருக்கேன் ப்ரோ. இந்தியா வந்ததும் என் கிட்னியைக் கூட தர்றேன். ப்ளீஸ் மீராவை வெளியே அனுப்பச் சொல்லுங்க' எனப் பதிவிட்டுள்ளார்.
குறையும் ஆதரவு:
சதீஷை சிலர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே போங்க எனக் கூறுகின்றனர். இந்த நெட்டிசனோ ஷாம்பூவில் கூட தனக்கு பிடிக்காதது மீரா ஷாம்பூ தான் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். சேரனுடனான மோதலால் மீராவுக்கு மக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு குறைந்து வருவதையே இது காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











