Bigg boss 3 tamil: பிக் பாஸ் வீட்டில் மீண்டும் போலீஸ்... மீரா மிதுனிடம் துருவித்துருவி விசாரணை!

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்துள்ள போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை நடத்தினர்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் மிகவும் முக்கியமானவர் மீரா மிதுன். காரணம் வனிதாவுக்கு பிறகு இவர் தான் டிஆர்பிக்கு கேரன்டி தந்துகொண்டிருக்கிறார்.

Bigg boss 3 tamil: Police investigation with Meera Mithun,

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னே மீரா மிதுன் மீது சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சர்ச்சைக்கு பெயர்போன மீரா, மின் சவுத் இந்தியா பட்டத்தை தவறாக பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு.

இதுபோல் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காகவே மீரா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் என்ற பேச்சும் உள்ளது.

மீராவின் தாய் உயர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவர் மீதான கைது நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எழுப்பூர் போலீசார் பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பண மோசடி வழக்கு தொடர்பாக மீராவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் முன்ஜாமீன் பெற்றிருப்பதால், கைது நடவடிக்கை இருக்காது என்றே தெரிகிறது. போலீசார் வெளியே வந்த பின்னர் தான் முழு விவரமும் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X