இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா கமல் சார்.. அதான் ஊருக்கே தெரியுமே உங்க ‘மாற்றத்திற்கான’ காரணம்!
இந்தியன் 2 படத்திற்காக தான் கமல் தனது மீசையை எடுத்துள்ளார்.
சென்னை: மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என பிக் பாஸ் புரொமோவில் கூறிய, கமல் தன் மீசையில்லாத முகத்திற்கான காரணத்தையும் இன்று கூறுவதாகக் கூறியுள்ளார். ஆனால், அவர் சொல்வதற்கு முன்னதாகவே நமக்கு அந்த காரணம் தெரியும்.
பிக் பாஸ் போன சீசனிலேயே தீவிர அரசியலில் இறங்கிய கமல், இனி தான் படங்களில் நடிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்தார். அதோடு, இந்தியன் 2 தனது கடைசிப் படமும் என அவர் கூறினார்.
பிக் பாஸ் மூன்றாவது சீசனே ஆரம்பித்து நாற்பது நாட்கள் ஓடி விட்டது. ஆனாலும் இந்தியன் 2 பட வேலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. பட பூஜை மட்டும் போடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு நடக்கவில்லை. பின்னர் படமே கைவிடப் பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்தியன் 2 வேலைகள்
ஷங்கரும் கூட தனது அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்து விட்டதாக ஒரு தகவல் வைரலானது. ஆனால், அந்த தகவல்கள் உண்மையில்லை என சமீபத்தில் கமலுக்கு நடத்தப்பட்ட மேக்கப் டெஸ்ட் மூலம் தெரிய வந்தது. இந்தியன் 2 படத்தில் முன்னர் பர்ஸ்ட் லுக்கில் வந்தது போல் இல்லாமல் கமலுக்கு வேறு மேக்கப் போட்டு டெஸ்ட் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

தோற்றத்தில் மாற்றம்
அதவாது, கடந்த சில நாட்களாக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னையில் முகாமிட்டு, கமலின் வயதான தோற்றத்தை வடிவமைத்துள்ளனர். இந்த புதிய தோற்றத்திற்காக தான் கமல் தனது மீசையை எடுத்திருக்கிறார்.

மீசைக்கான காரணம்
இந்த காரணத்தை தான் கமல் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடுவார் என தெரிகிறது. இது படத்திற்கு ஒரு பெரிய விளம்பரமாகவும் அமைந்துவிடும். மேலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும் அது இருக்கும்.

4 கதாநாயகிகள்
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானிசங்கர் என நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சித்தார்த், வித்யுத், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











