ஹாஹாஹா.. அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மொமண்ட்.. பிக் பாஸ் பத்தி பேசி வாங்கிக் கட்டிய ரியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ரியோ வெளியிட்ட பதிவை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகர் ரியோ வெளியிட்ட பதிவு ஒன்றிற்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3 பற்றி திரைப் பிரபலங்கள் பலரும் டிவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். போட்டியாளர்கள் ஒருபுறம் பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமாகிறார்கள் என்றால், இது போன்ற பதிவுகளால் பிரபலங்களும் மக்களின் கவனத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகர், நடிகைகள் பலரும் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவுகள் வெளியிடுகின்றனர். ஆனால், கமல் சொல்வது போல், 'எதிர்பாராததை எதிர் பாருங்கள்' என சில பதிவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கே ஆப்பாக மாறி விடுகிறது.

ரியோவின் கமெண்ட்

அந்தவகையில் பிக் பாஸ் பற்றிய பதிவால், தன் படத்தை தானே அசிங்கப்படுத்தி விட்டார் நடிகர் ரியோ. அவர் நேற்றைய எபிசோட்டில் வனிதா தான் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பது தெரிந்து, ரேஷ்மா, ஷெரீன் மற்றும் சாக்‌ஷியின் ரியாக்சன் எப்படி இருந்தது என ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வருடத்தின் சிறந்த ரியாக்சன் புகைப்படம் இது தான் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.

சேம் ரியாக்ஷன்

இதைப் பார்த்த ஒரு குறும்புக்கார நெட்டிசன், ‘ஆமாம் ஆமாம் நீங்க நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்திற்கு வெற்றி விழா கொண்டாடிய போது நாங்களும் இப்படித்தான் ரியாக்ட் செய்தோம்' என கிண்டலாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை ஆமாம் என மற்றொருவரும் வழி மொழிந்துள்ளார்.

நெநேஓரா வெற்றி விழா

நெநேஓரா வெற்றி விழா

சிவகார்த்திக்கேயன் தயாரிப்பில் ரியோ நாயகனாக அறிமுகமான படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனபோதும், இப்படத்திற்கு வெற்றி விழா கொண்டாடியது படக்குழு. அதனைத் தான் இந்த ரசிகர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

கலாய்க்காதீங்க பாஸ்

இந்த ரசிகரோ இன்னும் ஒரு படி மேலே போய், ‘ஓவரா கலாய்க்காதீங்க பாஸ். அப்புறம் அடுத்த சீசன்ல உங்களையும் ஒரு போட்டியாளரா பிடிச்சு உள்ள உட்கார வச்சிருவாங்க' என கமெண்ட் வெளியிட்டுள்ளார். இது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காரணம் கடந்த இரண்டு சீசன்களின் முடிவிலும் போட்டியாளர்களை செம கலாய் கலாய்த்த சாண்டி மாஸ்டர் தற்போது சீசன் 3ல் போட்டியாளராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X