எவிக்சனுக்கு பிறகு சாக்‌ஷி போட்ட நச் ‘இதயம்’ பதிவு.. கவின் - லாஸ் காதலைதான் மறைமுகமாக தாக்குகிறாரா?

பிக் பாஸில் இருந்து வெளியேறியுள்ள சாக்‌ஷி, இதயம் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Sakshi 1st Post: மறைமுகமாக Kavinனை தாக்கும் Sakshi- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால், அங்கு தனது அனுபவத்தைக் கூறுவது போன்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாக்‌ஷி வெளியேறியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே அவர் வெளியேறி விடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. ஆனால் தொடர்ந்து தப்பித்து வந்தவர், நேற்று ஒரு வழியாக வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மிகவும் நல்லவராக காணப்பட்டார் சாக்‌ஷி. கவினுடன் நெருங்கிப் பழகியதால் அவர் பிரச்சினையில் சிக்கினார்.

சாக்‌ஷி-கவின் :

சாக்‌ஷி-கவின் :

அவர்கள் இருவரும் பழகிய விதத்தைப் பார்த்து, காதலர்கள் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக லாஸ்லியா கவினுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்ததால், சாக்‌ஷி வில்லியானார். சாக்லேட் பிரச்சினையில் சாக்‌ஷியையே அனைவரும் திட்டினர்.

வில்லியானார்:

வில்லியானார்:

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாக்‌ஷி வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கத் தொடங்கினர். கடந்த வாரம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எவிக்சனில் இருந்து சாக்‌ஷி தப்பினார். ஒரு வழியாக நேற்று பிக் பாஸ் வீட்டில் மக்கள் அவரை வெளியே அனுப்பி விட்டனர்.

இதயம் :

இதயம் :

வெளியில் வந்ததும் சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம், அவர்களின் இதயங்களை தட்டி எழுப்பலாம்" எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை அவர் தான் போட்டாரா இல்லை அவரது அட்மின் போட்டாரா எனத் தெரியவில்லை.

முதல் பதிவு:

ஏனென்றால் சாக்‌ஷி பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போதெல்லாம், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் புகைப்பட பகிர்வுகள் மட்டுமே இருந்தது. தற்போது தான், வாக்கியங்களுடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, சாக்‌ஷி தான் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என கருதப்படுகிறது.

லாஸ்லியா -கவின்:

லாஸ்லியா -கவின்:

ஒருவேளை லாஸ்லியா-கவினை மனதில் வைத்து தான் இந்தப் பதிவை அவர் போட்டுள்ளாரா எனத் தெரியவில்லை. காரணம் பிக் பாஸ் வீட்டில் மற்ற யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தனக்கு விருப்பமானதைச் செய்து வந்தவர், வருபவர் லாஸ்லியா தான். அப்படிச் செய்து தான் அவர், கவின் உட்பட சக போட்டியாளர்களின் அன்பைப் பெற்று விட்டார். சாக்‌ஷியின் இந்தப் பதிவு அதைத்தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறதா எனத் தெரியவில்லை.

விமர்சனம்:

விமர்சனம்:

ஆனால், சாக்‌ஷியின் பதிவிற்கு நெட்டிசன்கள் கலவையான பதில் வெளியிட்டு வருகின்றனர். சிலர் அவரது தந்தையையும் பாராட்டியும், திட்டியும் பதிவு வெளியிட்டுள்ளனர். சாக்‌ஷியைப் போலவே அவரது தந்தையும் உணர்ச்சிப்பூர்வமாக அவசரப்பட்டு பேசுவதாக சிலர் தெரிவித்துள்ளனர். சிலர் சாக்‌ஷியின் நடவடிக்கைகளைப் பாராட்டியும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X