ஷெரீனிடம் ஓவராக நெருக்கம் காட்டும் தர்ஷன்... காதலை முறித்துக் கொள்ள முடிவெடுத்த பிரபல நடிகை!
தர்ஷன் ஷெரீனுடன் நெருங்கிப் பழகுவதால், தன் காதலைத் தியாகம் செய்ய முடிவெடுத்துள்ளார் நடிகை சனம்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் ஷெரீனை நிஜமாகவே காதலித்தால், தான் வாழ்த்தி விட்டு விலகி விடுவேன் எனத் தெரிவித்துள்ளார் தர்ஷனின் காதலியான நடிகை சனம் ஷெட்டி.
பிக் பாஸ் போட்டியாளர்களுள் மக்களிடையே அதிக ஆதரவைப் பெற்ற போட்டியாளராக தர்ஷன் இருந்து வருகிறார். இலங்கையில் இருந்து வந்துள்ள மாடலான அவர், தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார்.
வனிதாவுக்கு எதிராக கோபமாக சண்டை போட்டதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இம்முறை டைட்டிலை வெல்லுவார் என கருதப்படும் போட்டியாளர்கள் பட்டியலில் அவரது பெயர் தான் முதலிடத்தில் உள்ளது.

கிராமத்து டாஸ்க்:
இந்நிலையில், சமீபகாலமாக பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரான ஷெரீனுடன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார் தர்ஷன். கிராமத்து டாஸ்க் ஒன்றில் இருவரும் கணவன், மனைவியாக நடித்தனர். அதனைத் தொடர்ந்து அடிக்கடி இருவரும், ரொமான்ஸ் பார்வை பார்த்துக் கொள்வதும், பேசிக் கொள்வதுமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர்.

வைரல் வீடியோ:
லாஸ்லியாவை தர்ஷன் கண்டித்ததைத் தொடர்ந்து, அவர் ஷெரீனுடன் இரவில் பேசிக் கொள்ளும் வீடியோ ஒன்று வைரலானது. அதேபோல், இருவரும் ரொமான்சாக பேசிக் கொள்வது, தர்ஷனுக்கு ஷெரீன் முடி வெட்டி விடுவது போன்ற வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது. மீரா தன் காதலைக் கூறிய போது, கறாராக வெளியில் தனக்கு காதலி இருப்பதாகக் கூறிய தர்ஷன், தற்போது ஷெரீனிடம் இப்படி நெருக்கம் காட்டுவது உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சனம் எதிர்பார்ப்பு:
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தர்ஷனின் காதலியான நடிகை சனம் ஷெட்டி பேட்டியொன்றில் மனம் திறந்துள்ளார். அதில் அவர், ‘கிராமத்து டாஸ்க்கில் ஷெரீனுக்கு தர்ஷன் ஊட்டி விட்டார். மடியில் அமர வைத்துக் கொண்டார். ஒரு காதலியாக இதையெல்லாம் நான் செய்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் நான் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன்.

ஷெரீனுடன் காதல்:
ஆனால் எனக்கு அப்படி நடக்கவில்லை. நான் துரதிருஷ்டசாலி. இன்னமும் நான் தர்ஷனை ரொம்பவே காதலிக்கிறேன். மனது வலிக்கிறது. என்ன செய்ய? அவரைச் சொல்லி தப்பில்லை. எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல், ஒரே முகங்களைப் பார்த்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். அதனால் கூட ஷெரீனைக் காதலிக்கத் தோன்றியிருக்கலாம். காதலிக்கத் தொடங்கியிருக்கலாம்.

தியாகம்:
இதில் தவறு ஒன்றும் இல்லை. யாருக்கு யார் மீது எப்போது காதல் வரும் என யாராலும் சொல்ல முடியாது. ஒருவேளை தர்ஷனுக்கு ஷெரீன் மீது காதல் வந்திருந்தால், அதை என்னிடம் வெளிப்படையாகச் சொன்னாலே போதும். நான் அவர்களை வாழ்த்தி விட்டு ஒதுங்கி விடுவேன். தர்ஷன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











