“அய்யய்யோ அதை மறந்துட்டீங்களே கோபால்”.. காரித் துப்பிய மதுவைக் கலாய்த்த சாண்டியின் முதல் மனைவி!
மதுமிதாவைக் கலாய்த்து நடிகை காஜல் பசுபதி டிவீட் வெளியிட்டுள்ளார்.
சென்னை: சாண்டியை காரித்துப்பிய மதுமிதாவுக்கு, நடிகை காஜல் பசுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் கிராமம் டாஸ்க் கொடுத்தாலும் கொடுத்தார்கள், ஆளாளுக்கு அடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கிராமத்து மக்களாகவே மாறி, பேச்சிலும், நடவடிக்கைகளிலும் வெளுத்து வாங்கி வருகிறார்கள் போட்டியாளர்கள்.
நேற்று முன் தினம் நடந்த சண்டையில் மதுமிதா, சாண்டியைப் பார்த்து காரித் துப்பி, திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு தன் உருவத்தை வைத்து அவர் விமர்சித்ததையும் மதுமிதா அந்தச் சண்டையில் சுட்டிக் காட்டி இருந்தார்.
மறந்துட்டியே கோபால்:
அதோடு தனக்கு உடல் நலமில்லை எனவும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார் மது. ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு நேற்று மீண்டும் வழக்கம் போல், களத்தில் இறங்கி, ஊர்த் திருவிழாவில் நடனம் ஆடினார். இதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காஜல் டிவீட்:
சாண்டியின் முதல் மனைவியான காஜலும் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், ‘உடம்பு சரியில்லனு சொன்னதை மறந்துட்டீயே கோபால்' என மதுமிதாவைக் கிண்டல் செய்துள்ளார்.
மோசமான செயல்:
அதோடு, சாண்டியை மதுமிதா காரித் துப்பியதைப் பற்றி நேற்றே ஒரு டிவீட் போட்ட நிலையில், மற்றொரு டிவீட்டில், ‘சாண்டியை மட்டுமல்ல, வேறு யாரை அவர் காரித் துப்பி இருந்தாலும் அது தப்பு தான். ஒருவரை அவமானப் படுத்துவது போல், காரித் துப்புவது என்பது மிக மோசமான செயல்.

பதில்:
கலாச்சாரம், மேனர்ஸ் பத்தி பேசுற மதுமிதாவே இப்படி மோசமாக நடந்து கொள்ளலாமா. அவங்களுக்கும் கொஞ்சம் நல்லொழுக்கம் வேண்டும்' என காட்டமாக தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார் காஜல். இந்த டிவீட்டுக்கு ஆதரவாக நெட்டிசன்களும் பதில் அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











