என்னாது லாஸ்லியாவுக்கு ஜானு கெட்டப்பா.. திரிஷாவை இப்டி அசிங்கப்படுத்தறீங்களே பிக் பாஸ்!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்கள் சினிமா கதாபாத்திரங்களாக மாறியுள்ளனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 37 : Promo 1 : லாஸ்லியாவுக்கு ஜானு கெட்டப்பா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்குகாக போட்டியாளர்கள் அனைவரும் சினிமா கதாபாத்திரங்களாக மாறியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் வாராவாரம் லக்ஸுரி பட்ஜெட்டுக்காக ஒரு டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். முதல் சீசனில் இருந்தே, மக்களுக்கு இதில் மிகவும் பிடித்த டாஸ்க், போட்டியாளர்கள் சினிமா பிரபலங்களாக மாறி ஆடிப்பாடும் டாஸ்க் தான். முதல் இரண்டு சீசனிலுமே இந்த டாஸ்க்கிற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களுக்கு அந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரொமோ வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜாலி டாஸ்க்:

இந்த டாஸ்க்கில் கவின் தல, முகென் தளபதி, சாண்டி சிம்பு, சேரன் சூப்பர்ஸ்டார், சரவணன் சின்னக்கவுண்டர் என கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளனர். பெண்களில் லாஸ்லியா, திரிஷாவாக 96 பட மஞ்சள் நிற சுடிதாரில் வலம் வருகிறார். முதல் சீசனில் இருந்தே தனக்கு மிகவும் பிடித்தமான டாஸ்க் இது என ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

ஏற்கனவே போன வாரம் கிராமத்து டாஸ்க் கொடுத்து, பிரச்சினை மேல் பிரச்சினை செய்து விட்டனர். எப்போது பார்த்தாலும் பிக் பாஸ் வீடு கூச்சலும், குழப்பமுமாகவே இருந்தது. அதனால் இந்த வாரமாவது பொழுதுபோக்காக, ஜாலியாக இருந்தால் சரி என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஜானுவாக லாஸ்லியா:

ஆரம்பத்தில் இருந்த அளவுக்கு தற்போது லாஸ்லியாவுக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. காரணம் அவர் பெரும்பாலான பிரச்சினைகளில் இருந்து விலகி இருப்பது தான். இந்தச் சூழ்நிலையில் இந்த டாஸ்க்கில் அவருக்கு திரிஷா வேடம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை இன்னும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. ‘இதென்னடா ஜானுவுக்கு வந்த சோதனை' என அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

விஜய்யாக முகென்:

பிக் பாஸ் வீட்டில் அவ்வப்போது தனது கோப முகத்தைக் காட்டி வரும் முகெனுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த வாரம் அவருக்கு விஜய் கதாபாத்திரம் தரப்பட்டுள்ளதால், அவர் என்ன செய்யப் போகிறாரோ என ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள்.

புதிய முகமூடி:

புதிய முகமூடி:

எது எப்படியோ, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் நடித்துக் கொண்டு, தங்களது உண்மையான முகத்தை மறைத்தபடி தான் உலா வருகின்றனர். கமல் கூறியபடி முகமூடியோடு வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த டாஸ்க்கில் சினிமா நட்சத்திரங்களாக புது முகமூடியை அவர்கள் மாட்டி இருக்கின்றனர். எப்படியோ நமக்கு பொழுதுபோனால் சரிதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X