ரோம் பத்தி எரிஞ்சப்ப நீரோ பிடில் வாசிச்சாராம்.. உங்களைப் பார்த்தா இந்தக் கதைதான் ஞாபகம் வருது வனிதா!

வெளியே போலீஸ் காத்திருந்த போதும், பிக் பாஸ் வீட்டில் வனிதா வழக்கம் போல் சண்டைக்கோழியாக வலம் வந்தார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil: வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: வனிதா பிக் பாஸ் வீட்டில் வைத்து கைது செய்யப்படுவாரா என இங்கே மக்கள் ஆர்வமாகக் காத்திருக்க, அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடமையே கண்ணாக தன் பத்த வைக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக பிக் பாஸ் வீட்டில் செய்து வருகிறார் வனிதா.

ரோம் பத்தி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தார் என ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. அது போல், நேற்று முன் தினம், பிக் பாஸ் வீட்டில் வனிதாவைக் கைது செய்ய போலீஸ் வந்திருக்கிறது என்ற செய்தி தான் டாபிக் ஆப் தி டவுனாக இருந்தது. தன் மகளை வனிதா கடத்தி விட்டார் என அவரது இரண்டாவது கணவர் தெலுங்கானா போலீசுடன் பிக் பாஸ் வீட்டுக்குச் செல்ல பரபரப்பு ஏற்பட்டது.

பின் மாலையில் மகள் வந்து, தான் தாயுடன் இருக்கப் போவதாகக் கூறியதும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டது. பின் போலீஸ் வனிதாவைக் கைது செய்யாமல் அமைதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து திரும்பியது.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

இவை அனைத்தும் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிந்த விசயம் தான். சரி பிக் பாஸ் இது பற்றிய காட்சிகளை நேற்றைய எபிசோட்டில் காட்டுவார் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், ஏதோ ஜஸ்ட் எறும்பு கடிச்ச மொமண்ட் மாதிரி, இந்த சம்பவத்தை சில நிமிடங்கள் மட்டுமே காட்டினார்கள். அதுவும், வனிதா கன்பெக்சன் ரூமுக்குப் போவது, பின் ரேஷ்மாவிடம் பேசுவது என இரண்டே காட்சிகள் மட்டும் தான்.

ஆச்சர்யம்:

ஆச்சர்யம்:

பிரச்சினை என்ற போது தோழி ரேஷ்மாவிடம் அதனைப் பகிர்ந்து கொண்ட வனிதா, அது தீர்ந்து விட்டது என்ற சந்தோசத்தை எப்படிக் கூறாமல் இருந்திருப்பார். ஆனால், அது எது பற்றியும் நிகழ்ச்சியில் காட்டாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றமே. சரி, அதைத் தான் காட்டவில்லை, தன்னைப் போலீஸ் கைது செய்ய வந்திருக்கிறது என்ற பயம்கூட வனிதா முகத்தில் இல்லை. இதுதான் ஆச்சர்யத்திலும் பெரிய ஆச்சர்யம்.

கவலையே இல்லை:

கவலையே இல்லை:

வெளியில் தன் மகள் பற்றிய பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறது என்றால், ஒரு தாய் இப்படியா ரியாக்ட் செய்வார். ஒரு தவிப்புடன், சோகமாக இருக்க வேண்டாமா. எங்கே நாம் உள்ளே இருக்கும் இந்த வேளையில் தன் மகளை இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் அழைத்துச் சென்று விடுவாரோ என்ற கவலை கொஞ்சம்கூட அவர் முகத்தில் இல்லை.

சண்டைக்கோழி வனிதா:

சண்டைக்கோழி வனிதா:

வழக்கம் போல், யாருடன் சண்டை போடலாம் என சண்டைக்கோழியாகத் தான் வீட்டில் வலம் வந்தார் வனிதா. சும்மா இருந்த சேரனை தேவையில்லாமல், வம்புக்கு இழுத்து சண்டை போட்டார். பின் ஆண் போட்டியாளர்களின் பெர்பாமன்சையும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார். இதெல்லாம் பார்ப்பதற்கு நெருடலாகவே இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X