கடைசி நேரத்தில் கைதில் இருந்து தப்பிய வனிதா.. எதிர்பாராதவிதமாக போலீசில் மாட்டிக் கொண்ட மீரா!
Recommended Video
சென்னை: வனிதாவின் மகள் அளித்த வாக்குமூலத்தால் பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதா விஜயகுமார் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளும், அருண் விஜயின் சகோதரியுமான வனிதா, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். மற்றவர்களை அதிகாரம் செய்து பேசுவது, கோபத்தில் கத்துவது என அவரால் பிக் பாஸ் வீடு எப்போதும் களேபரமாகவே இருக்கிறது.
இந்நிலையில், தனது மகள் ஜெயந்திகாவை கடத்திக் கொண்டு வந்து விட்டதாக, வனிதா மீது அவரது இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் தெலுங்கானா போலீசார் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். பின்னர் தமிழக போலீசார் உதவியோடு வனிதாவைக் கைது செய்ய அவர்கள் பிக் பாஸ் செட்டிற்குள் சென்றனர்.

நேரில் விசாரணை:
அங்கு வனிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சிறுமியை அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டது. சிறுமி தந்தையுடன் செல்ல விருப்பப்பட்டால், ஆள் கடத்தல் வழக்கில் வனிதாவைக் கைது செய்ய போலீசார் முடிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று மாலை அச்சிறுமி பிக் பாஸ் செட்டிற்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மகளின் விருப்பம்:
அப்போது அவர், ‘தான் தாயுடன் செல்ல விரும்புவதாக' தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வனிதாவைப் போலீசார் கைது செய்யாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதனால் நேற்று பிக் பாஸ் வீட்டில் நிலவிய பரபரப்பான சூழல் முடிவுக்கு வந்தது.

கண்டெண்ட் குயின்:
இந்த வழக்கில் ஆனந்தராஜ் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் பொறுத்து, தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வனிதா இருப்பாரா, அல்லது வெளியில் செல்வாரா என்பது தெரியவரும். ஆனால் பிக் பாஸ் வீட்டில் வனிதாவால் தான் நிறைய கண்டெண்ட் கிடைத்து வருகிறது. அதனால் அவ்வளவு சீக்கிரம் அவரை பிக் பாஸ் வெளியில் அனுப்பிவிட மாட்டார்.

மீராவிடமும் விசாரணை:
இதற்கிடையே, வனிதாவிடம் விசாரணை நடத்தச் சென்ற போலீசார், அங்கிருந்த மீராவிடமும் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி மோசடி செய்ததாக மீரா மீது பல வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக நேரில் ஆஜராகும்படி மீராவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மீராவிடம் போலீசார் நேரில் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











