மகள் கடத்தல் விவகாரம்.. வனிதா மீது தப்பில்லை.. திடீரென அந்தர்பல்டி அடித்த 2வது கணவர்!
தனது மகள் விவகாரத்தில் வனிதாவை அவரது வழக்கறிஞர் தவறாக வழிநடத்துவதாக ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மகளை அழைத்துக் கொண்டு வந்த விவகாரத்தில் வனிதா மீது தப்பில்லை என நினைப்பதாக திடீரென அந்தர்பல்டி அடித்துள்ளார் அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜ்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜ். கடந்த 2012ம் ஆண்டு அவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்தது. அதனைத் தொடர்ந்து மகள் ஜெயந்திகா அப்பாவுடன் வாழ்வது என முடிவு செய்யப்பட்டது. அவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக தந்தையுடன் தெலுங்கானாவில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக தெலுங்கானா சென்ற வனிதா, பள்ளி சென்று திரும்பிய மகளை அழைத்துக் கொண்டு சென்னை வந்து விட்டார். இதனால் தன் மகளைக் கடத்திக் கொண்டு சென்று விட்டதாக வனிதா மீது போலீசில் புகார் அளித்தார் ஆனந்தராஜ்.

தெலுங்கானா போலீஸ்:
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, வனிதா பிக் பாஸ் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக போலீசார் உதவியுடன் பிக் பாஸ் செட்டிற்கு சென்று வனிதாவிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தெலங்கானா மாநில சமூக நலத்துறை பெண் அதிகாரி ஒருவரும் உடனிருந்தார்.

வனிதாவின் வக்கீல்:
வனிதாவின் சார்பில், அவரது வழக்கறிஞர் ஸ்ரீதரும் தெலங்கானா போலீசாரிடமும், தெலங்கான சமூக நலத்துறை அதிகாரியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மகளை அழைத்து வர வனிதாவிற்கும் உரிமை இருப்பதாகவும், அது தொடர்பாக தன்னிடம் ஆர்டர் இருப்பதாகவும் ஸ்ரீதர் வாதாடியதாகத் தெரிகிறது.

கணவர் பேட்டி:
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தராஜ், ‘வனிதாவின் வக்கீல் தன்னிடம் ஒரு ஆர்டர் இருப்பதாக கூறி வருகிறாரே தவிர, அதனை எங்களிடம் இதுவரை காட்டவில்லை. எனக்குத் தெரிந்து வனிதாவிடமும் அவர் அப்படித் தான் கூறி இருப்பார் எனத் தெரிகிறது. அந்த தைரியத்தில் தான் வனிதா துணிந்து வந்து மகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார்' எனத் தெரிவித்தார்.

புதிய திருப்பம்:
இதுவரை வனிதா தான் தன் மகளைக் கடத்தி விட்டதாகக் கூறி வந்த ஆனந்தராஜ், தற்போது திடீரென வழக்கறிஞர் மீது பழியைப் போட்டுள்ளது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குத் தகுந்தாற்போல், ஜெயந்திகாவும் தான் தாயுடனேயே இருக்க விரும்புவதாக நேற்று விசாரணையில் கூறியதால், கடைசி நேரத்தில் வனிதா கைதில் இருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











