கமல் டீசரில் கதறி அழும் லாஸ்லியா.. அப்போ கஸ்தூரி பயந்த மாதிரி ‘அதை’ பத்தி தான் பேசப் போகிறாரா?
பிக் பாஸ் டீசரில் லாஸ்லியா அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: கமல் தோன்றும் பிக் பாஸ் டீசரில் லாஸ்லியா அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் ஒரு போட்டியாளர் வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
இம்முறை சீசனில் மக்களின் ஆதரவைப் பெற்ற போட்டியாளராக இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா இருந்து வருகிறார். நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் இதுவரை அவர் எந்தப் பிரச்சினையும் சிக்கவில்லை.

லக்சுரி டாஸ்க்:
இந்நிலையில் லக்சுரி டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்களும் தங்களது சோகக் கதைகளைக் கடந்த சில நாட்களாகக் கூறி வருகின்றனர். இன்னும் லாஸ்லியா, பாத்திமா பாபு, சாக்ஷி, மீரா, சாண்டி மற்றும் முகின் மட்டும் தான் தங்களது கதைகளைக் கூறவில்லை.

கமல் டீசர்:
இன்று அவர்கள் தங்கள் கதைகளைக் கூறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இன்று கமலும் வருவார் என்பதால், போட்டியாளர்களுக்கு அவர் அறிவுரை கூறி, குறும்படம் போட்டு என பரபரப்பாக இன்றைய நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைப் போர்:
இது தொடர்பாக விஜய் டிவி வெளியிட்டுள்ள டீசரில், லாஸ்லியா அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் மூலம், இன்று அவர் பேசுவார் எனத் தெரிகிறது. லாஸ்லியா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு நடந்த போர் பற்றி அவர் உருக்கமாக ஏதாவது பேசக்கூடும் எனத் தெரிகிறது.

கஸ்தூரி டிவீட்:
ஏற்கனவே, நேற்று நடிகை கஸ்தூரி வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில், "போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு" எனத் தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலம் கஸ்தூரி பயந்த மாதிரியே நடக்கப் போகிறதோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எப்படியும் அவர் குடும்பத்தைப் பற்றி பேசினாலும், அதில் நிச்சயம் இலங்கை போர் சம்பந்தப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதனால் இன்றைய எபிசோட்டை லாஸ்லியா ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











