என்னாது விஷத்துக்கு பர்த்டேவா..? அப்போ இந்த வாரமும் குறும்படம் போட மாட்டீங்களா கமல் சார்?
சாக்ஷிக்கு பிறந்தநாள் என்பதால் அவரது குறும்படத்தை பிக் பாஸ் போட மாட்டார் எனத் தெரிகிறது.
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர் சாக்ஷிக்கு பிறந்ததினம் என்பதால், அவரைப் பற்றிய குறும்படத்தைப் பிக் பாஸ் போடுவாரா என்பது சந்தேகமே.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விசயம் கவின் -சாக்ஷி-லாஸ்லியா காதல் விவகாரம் தான். நிஜமாகவே இவர்களுக்குள் யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்பது பிக் பாஸுக்கே புரிந்ததா என்பது சந்தேகம் தான். அந்தளவுக்கு இடியாப்ப சிக்கலாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இதற்கிடையே இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவியான சாக்ஷி, மீரா மிதுனுடனும் ஒரு பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ளார். டிக் டிக் டிக் டாஸ்க்கில் மீரா கேட்டுக் கொண்டதாலேயே சக ஹவுஸ்மேட்களை அழைத்து மீட்டிங் போட்டதாக சாக்ஷி கூறி வருகிறார்.

குறும்படம்:
ஆனால், ஆரம்பம் முதலே இதனை மறுத்து வருகிறார் மீரா. தான் அப்செட்டில் இருந்த போது, சாக்ஷியாக வந்து கேட்டே, இந்த மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்ததாக மீரா கூறி வருகிறார். இது தொடர்பாக கமல் சார் குறும்படம் ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டு வருகிறார். இது தொடர்பான வாக்குவாதம் அடிக்கடி நடைபெற்று வருவதால், கமல் இந்த வாரம் கட்டாயம் ஒரு குறும்படம் போடுவார் என மக்கள் எதிர்பார்த்தனர்.

சாக்ஷிக்கு பிறந்தநாள்:
ஆனால், நான்காவது வாரமாக இன்றும் கமல் குறும்படம் போடுவது சந்தேகம் தான். காரணம், நேற்று சாக்ஷியின் பிறந்தநாள். எனவே, நேற்று பதிவு செய்யப்பட்ட எபிசோட்டில் நிச்சயம் சாக்ஷிக்கு கேக் வெட்டி கொண்டாடி இருப்பார்கள். அதனால், பிறந்தநாளும் அதுவுமாக சாக்ஷியை கஷ்டப்படுத்த வேண்டாம் என பிக் பாஸ் மன்னித்து விட வாய்ப்புகள் அதிகம்.

விவாகரத்தானவர்:
ஏற்கனவே தான் விவாகரத்தானவர் என்பதை மறைத்து பிக் பாஸ் வீட்டில் கவினுடன் காதல் என நாடகமாடி வருகிறார் என சாக்ஷியை ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இந்த வாரம் அவர் வீட்டின் கேப்டன் ஆனதால், அவரை நாமினேட் செய்ய முடியவில்லை. எப்படியும் அடுத்த வாரமாவது அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என பிக் பாஸிடம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

விஷம்:
ஆனால், சாக்ஷியை வைத்து தான் வீட்டில் நிறைய கண்டெண்ட் கிடைத்து வருகிறது. எனவே குறும்படம் போட்டெல்லாம் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற மாட்டார்கள். சாக்ஷி ஒரு விஷம், அவர் கவினைக் காதலிப்பது போல் நடிக்கிறார் என சமூகவலைதளங்களில் திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











