பிக் பாஸ் 3: நாம நினைச்சதுல பாதி உண்மை.. பாதி தப்பு.. ஆனா கன்பார்மா சண்டைக்கு சான்ஸ் இல்ல!

பிக் பாஸ் ஒளிபரப்பு நாளில் மாற்றம் செய்துள்ளது விஜய் டிவி.

By Staff

Recommended Video

Bigg Boss Season 3: இன்னும் 4 நாட்களில் பிக் பாஸ் 3- வீடியோ

சென்னை: பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பு நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்களாக ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலே, மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் சேர்ந்து வசிக்கப் போகும் அந்த 15 பிரபலங்கள் யார் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளன்று தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

நேரம் மாற்றம்:

நேரம் மாற்றம்:

கடந்த இரு சீசன்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் இம்முறை நிகழ்ச்சியின் தொடக்க நாள் ஒளிபரப்பு இரவு 8 மணிக்கு என விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

ரிமோட் பிரச்சினை:

ரிமோட் பிரச்சினை:

காரணம் அந்த நேரத்தில் விஜய் டிவியிலும் சரி, மற்ற சேனல்களிலும் சரி அதிக டிஆர்பி தரும் பிரபல நாடகங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க டிவி ரிமோட் கையில் கிடைக்குமா என்பது அவர்களது மிகப்பெரிய கவலையாக இருந்தது.

முதல் நாள் மட்டும்:

முதல் நாள் மட்டும்:

இந்நிலையில் பிக் பாஸ் ரசிகர்களின் கவலையை நீக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதாவது, நிகழ்ச்சியின் தொடக்க நாளில் மட்டும் தான், இரவு 8 மணிக்கு பிக் பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் நாள் என்பதால், அனைத்து போட்டியாளர்களின் அறிமுகம், பிக் பாஸ் வீட்டை கமல் சுற்றிக் காட்டும் படலம், பிறகு பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் இரவு சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்வது என நிகழ்ச்சி நீண்ட நேரம் ஒளிபரப்பாகும். அதனால் தான் அன்றைய தினம் மட்டும் சற்று முன்கூட்டியே நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார்களாம்.

 ரசிகர்கள் மகிழ்ச்சி:

ரசிகர்கள் மகிழ்ச்சி:

மற்றபடி, அடுத்த நாளில் இருந்து இரவு 9.30 மணிக்கு தான் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9.30 முதல் 11 மணி வரை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. கடந்த முறை போல் 9 மணிக்கு இல்லாமல், சற்று தாமதமாக 9.30க்கு மேல் நிகழ்ச்சி ஆரம்பிப்பதால், குழந்தைகளை உறங்க வைத்து விட்டு இல்லத்தரசிகளும் நிம்மதியாக நிகழ்ச்சியைப் பார்க்க முடியும். பிக் பாஸின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X