ஷட்அப் பண்ணு, நீங்க ஷட்அப் பண்ணுங்க: வனிதாவுக்கு நெத்தியடி கொடுத்த மதுமிதா

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 9 : Promo 1: Madhumitha Vs Vanitha : தொடரும் அபியின் குழந்தை பிரச்சனை-வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் வனிதா விஜயகுமார், மதுமிதா இடையே பயங்கர சண்டை நடப்பது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் சண்டையே நடக்க மாட்டேங்குதே என்று பார்வையாளர்கள் வருத்தப்பட்டனர். அவர்கள் தங்களின் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்ததை பிக் பாஸ் பார்த்துவிட்டார் என்றே கூற வேண்டும்.

இல்லை என்றால் வனிதா, ஜாங்கிரி மதுமிதா இடையே இப்படி ஒரு சண்டையை மூட்டிவிட்டிருப்பார்களா?

மதுமிதா

ஒன்னுமே தெரியாத ஊமக்குசும்பி மாதிரி இருப்பாங்களா, ஆனால் அவங்க செய்கிற காரியங்களை எல்லாம் நம்பவே முடியாது, கட்டின தாலியை கழற்றி வைத்துவிட்டு வருவாங்களாம், ஆனால் அந்த பொண்ணு ஒரு பாட்டிலை வைத்து குழந்தை போன்று காட்டினால் அதை தப்பா ப்ரொஜெக்ட் பண்ணுகிற என்று வனிதா மதுமிதாவை விளாசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சண்டை

சண்டை

வனிதா பேசியதை கேட்ட மதுமிதா அடங்கிப் போகவில்லை. மாறாக அவ பண்ணினது தப்பு தான், ஓவரா தான் பண்ணுறான்னு அந்த வாய் சொல்லிச்சுல்ல அப்போ, அவ ஓவராத் தான் பண்ணுறான்னு நீ சொல்லல என்று மதிமிதா வனிதாவிடம் கேட்க அவரோ அதை காதில் வாங்காமல் திட்டுகிறார். நீ ஷட்ஆப் என்று வனிதா கூற மதுமிதாவோ நீங்க ஷட்அப் பண்ணுங்க என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா சொன்ன ஷட்அப் பண்ணுங்க பிரபலமானதால் அதை இந்த சீசனிலும் பயன்படுத்தும் பிக் பாஸின் அறிவை என்ன சொல்ல. எதை தான் காப்பியடிப்பது என்று விவஸ்தையே இல்லையா பிக் பாஸ் என்று கூறி நெட்டிசன்கள் சிரிக்கிறார்கள். மேலும் தலைவி ஓவியா ராக்ஸ் என்கிறது ஓவியா ஆர்மி. ஆமாம், 3வது சீசன் துவங்கியபோதிலும் ஓவியா ஆர்மி இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

சரியே

மதுமிதா பேசியதில் தவறே இல்லை. இந்த வனிதா தேவையில்லாமல் அதை ஊதி பெரிதாக்குகிறார். தாலியை கழற்றி வைப்பது எல்லாம் இந்த காலத்தில் ஒரு பெரிய விஷயமே இல்லை. வனிதா வேண்டும் என்றே மதுமிதாவை குறை சொல்கிறார். வனிதாவுக்கு ஏற்ற ஆள் மதுமிதா தான். நீ நல்லா திட்டுமா மது, நாங்க இருக்கோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X