எங்களுக்கு பிபி கஸ்தூரி வேண்டாம், 'டி. கஸ்தூரி' தான் வேண்டும்

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கஸ்தூரியை பார்த்து பார்வையாளர்களே பரிதாபப்படுகிறார்கள்.

நடிகை கஸ்தூரி சினிமா, நாட்டு நடப்பு குறித்து ட்விட்டரில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார். அதை பார்த்தவர்கள் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் செமயாக இருக்கும் என்றார்கள்.

குழந்தைகளுக்காக பிக் பாஸ் பக்கம் திரும்பாத கஸ்தூரி இந்த சீசனில் 17வது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

கஸ்தூரி

கஸ்தூரி

பிக் பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரியை பார்த்த பார்வையாளர்கள் இருக்கு இனி செம என்டர்டெயின்மென்ட் இருக்கு என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் சக போட்டியாளர்கள் கஸ்தூரியை கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள். பட்டு, பட்டுன்னு பேசும் கஸ்தூரிக்கு பிக் பாஸ் வீட்டில் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர் படும் பாட்டை பார்த்து பார்வையாளர்கள் தான் பரிதாபப்படுகிறார்கள்.

வனிதா

வனிதா

கஸ்தூரி சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுப்பார், வார இறுதி நாட்களில் கமல் ஹாஸனயே கேள்வி கேட்பார். பிக் பாஸ் வீடு பரபரக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கஸ்தூரி வந்த உடனேயே வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து நாட்டாமை செய்து கொண்டிருக்கிறார். வனிதா முன்பு கஸ்தூரி டம்மியாகிவிட்டார்.

பிரபலம்

பிரபலம்

சாண்டி மற்றும் கவின் சேர்ந்து கொண்டு கஸ்தூரியை கிண்டல் செய்வதும், அசிங்கப்படுத்துவும் ஓவராக உள்ளது. கஸ்தூரி பாவம். பெரிய நடிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு போகவே கூடாது. தராதரம் இல்லாமல் கஸ்தூரியை கலாய்க்கிறார்கள். இதை ஏன் கமல் ஹாஸன் கண்டுகொள்ளவில்லை என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தயவு செய்து கஸ்தூரியை காப்பாற்றுங்கள் கமல் சார் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

டார்கெட்

டார்கெட்

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரை விடவும் கஸ்தூரி எவ்வளவோ மேல். ஆனால் பாவம் அனைவரும் அவரையே கலாய்க்கிறார்கள். அனைவரும் கஸ்தூரிக்கு எதிராக திரும்பும் அளவுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லையே என்று பார்வையாளர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள். கஸ்தூரி அக்கா ட்விட்டரில் மட்டும் தான் தெம்பாக பேசுவாரா, எங்களுக்கு ட்விட்டரில் உள்ள கஸ்தூரி தான் வேண்டும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X