இதுக்கும் மருத்துவ முத்தத்துக்கும் சம்பந்தமில்லையே பிக்பாஸ் வீட்டில் அப்படி கிஸ் கொடுத்த பிரபல நடிகை
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பிரபல நடிகை கொடுத்த முத்தம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கும் மருத்துவ முத்தத்துக்கும் சம்பந்தம் இல்லையே என்று நெட்டிசன்ஸ் கேட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் மூலமாகத்தான் அறிமுகமானது, புதிய வகையான அந்த மருத்துவ முத்தம்!
அந்த முத்தத்தை, முத்த மன்னன் கமல்ஹாசனுக்கே அறிமுகம் செய்து வைத்தார், நடிகர் ஆரவ்.

முத்தக் கூத்து
பிக் பாஸ் முதல் சீசனில் நடந்த மொத்த, முத்தக் கூத்து இது. நடிகை ஓவியாவுக்கு பிக்பாஸ் வீட்டில் நடிகர் ஆரவ் கொடுத்த முத்தம்தான் அது. அந்த முத்தம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின அப்போது. அது மறந்து இப்போது அடுத்த அமர்க்களங்கள் நடந்து வருகின்றன பிக்பாஸ் வீட்டில்.

டமார் டுமீர் விஷயம்
தமிழ் பிக்பாஸில் பல டமார் டுமீர் விஷயங்கள் நடந்து கொண்டிருக்க, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், பரபரப்பாகி வருகிறது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி. அங்கு பிரபல நடிகை கொடுத்த முத்தம்தான் பரபரப்பாகி இருக்கிறது, இப்போது. இது ஒன்னும் மருத்துவ முத்தம் இல்லையே என சோசியல் மீடியாவில் கேட்கிறார்கள், நெட்டிசன்ஸ்.

மோனல் கஜ்ஜார்
தமிழில், கவுரவ் நாராயணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் படங்களில் நடித்திருப்பவர் மோனல் கஜ்ஜார். இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்தி, குஜராத்தி மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

தங்கமான பொண்ணு
இவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவருக்கு அந்த வீட்டில் தங்கமான பொண்ணு இமேஜ் இருக்கிறது. எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கும் நடிகை மோனல், எதற்கெடுத்தாலும் எமோஷனாகி விடுகிறார் என்கிறார்கள். எதையாவது பற்றி பேச ஆரம்பித்தால் குபுக்கென்று பொங்கிவிடுகிறது கண்ணீர்.

வேறு அர்த்தம்
இந்த புகார் மட்டும் இருக்கிறது, அவர் மீது. இந்நிலையில் இவர் காமெடியனான அவினாஸுக்கு பிக்பாஸ் வீட்டில் கொடுத்த முத்தம் பரபரப்பாகி இருக்கிறது. அவினாஸும் பிக்பாஸ் வீட்டில் நல்ல பெயரை பெற்றிருக்கிறார். அவரும் மோனலும் கடந்த சில நாட்களாக நெருக்கமாகி வரும் நிலையில் இந்த முத்தத்துக்கு வேறு அர்த்தம் சொல்கின்றனர்.

நெட்டிசன்ஸ் கிண்டல்
இந்த முத்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது லிப் டு லிப் கிஸ் இல்லை. நெற்றியில்தான் அந்த முத்தத்தைக் கொடுத்துள்ளார் நடிகை மோனால் கஜ்ஜார். இதையடுத்து இது மருத்துவ முத்தம் இல்லையே என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்ஸ் கிண்டலாகக் கேட்டுள்ளனர்.

மணாலி சென்றார்
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அவர் வைல்ட் டாக் என்ற படத்தில் ஷூட்டிங்கிறாக மணாலி சென்றதால், கடந்த வாரம் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில், நடிகை சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வாரம் மீண்டும் நாகார்ஜுனா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











