கொரோனா காரணமா..? பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய அந்த பிரபலம்.. ரசிகர்கள் வியப்பு!
ஐதராபாத்: பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரபலம் ஒருவர், திடீரென வெளியேறி இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசன் ஏகப்பட்ட வரவேற்புடன் சென்று கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் வீட்டுக்கும் போட்டியாளர்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளும் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பு
நிகழ்ச்சியை நடத்தும் விஜய் டிவி, ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை வைத்து அழகான ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது. அது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பேசப் போகிறார்
ஒவ்வொரு வார இறுதியிலும் அவர் கலக்கி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறார். அவர் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் வீட்டுக்குள் நடக்கப் போகும் விஷயங்களும் ஆர்வத்தைத் தூண்டி உள்ளன. ரசிகர்கள் அதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தெலுங்கு பிக் பாஸ்
தமிழைப் போலவே தெலுங்கு பிக் பாஸ் 4 சீசனும் பரபரப்பாகி இருக்கிறது. நடிகர் நாகார்ஜுனா, இதை தொகுத்து வழங்குகிறார். சிலர் வெளியேறிய நிலையில், சிலர் புதிதாக இந்த வீட்டுக்குள் வந்துள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்.

ஷூட்டிங் சென்றார்
இதின் ஷூட்டிங்கிற்காக, நாகார்ஜுனா மணாலி சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அவருக்குப் பதிலாக, அவர் மருமகளும் நடிகையுமான சமந்தா, நிகழ்ச்சியை போன வாரம் தொகுத்து வழங்கினார். இந்த வாரமும் அவர் தொகுத்து வழங்குவாரா என்பது தெரியவில்லை.

வெளியேறிய ராப்பர்
இந்நிலையில், இந்த வீட்டில் இருந்து பிரபல பாடகர் நோயல் சீன் உடல் நலப் பிரச்னை காரணமாக வெளியேறி இருக்கிறார். ராப் பாடகரான இவர், தெலுங்கில் பல பாடல்களை பாடியிருக்கிறார். தமிழில், அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திலும், காதல்னா சும்மா இல்லை படத்திலும் பாடி இருக்கிறார்.

நடிகை எஸ்தர் நோரன்ஹா
இவர், பிரபு, ஜெயராம் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோயினாக நடித்த எஸ்தர் நோரன்ஹாவை திருமணம் செய்திருந்தார். கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர். இது பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திரும்பி வருவாரா?
பிக் பாஸ் வீட்டில் இருந்த நோயலுக்கு கால் மற்றும் தோள்பட்டையில் கடுமையான வலி ஏற்பட்டது. திடீரென அவர் உடல் நலம் சரியில்லாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக அவர் வெளியேற்றப்பட்டார். அவர் நிரந்தரமாக வெளியேறிவிட்டாரா, இல்லை சிகிச்சை முடிந்து திரும்பி வருவாரா என்பது தெரியவில்லை.

கொரோனா பாதிப்பா?
இதற்கிடையே, நோயலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதனாலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை சேனல் நிர்வாகம் மறுத்துள்ளது. அது வதந்தி என்றும் அதில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











