ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லும் ஹீரோ.. பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் வழங்கப் போறாராமே?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார்.
மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.

ஷிவானி நாராயணன்
அவர்கள், ரியோ ராஜ், சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ஆஜித் காலிக், ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம் சேகர், கேப்ரியலா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா ஆகிய 16 பேர் ஆவார்கள்.

பஞ்சாயத்துகள்
விஜய் டிவி நிர்வாகம் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை வைத்து புதிய புதிய புரமோவை வெளியிட்டு வருகிறது. அது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

நாகார்ஜுனா
இதற்கிடையே தெலுங்கு பிக் பாஸ் 4 சீசன் கடந்த மாதம் தொடங்கியது. நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இதில் நடிகை மோனல் கஜ்ஜார், அம்மா ராஜசேகர் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர. ஆரம்பத்தில் மெதுவாக சென்ற இந்த நிகழ்ச்சி இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளனது.

ரம்யா கிருஷ்ணன்
இயக்குனர் சூரிய கிரண் உள்பட சிலர் வெளியேறிய நிலையில் ஒரு சிலர் புதிதாக வீட்டுக்குள் வந்துள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்.

தாய்லாந்தில் ஷூட்டிங்
இந்தப் படத்தின் ஷூட்டிங், தாய்லாந்தில் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதற்காக அவர் அங்கு செல்ல இருக்கிறார். 3 வாரம் அங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் அவர் வரும் வரை, நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

திரும்ப முடியலை
ஏற்கனவே, பிக் பாஸ் 3 சீசனின் போதும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படி பாதியில் இணைந்திருக்கிறார். அப்போது நடிகர் நாகார்ஜுனா தனது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் வெளிநாடு சென்றார். அவரால் பாதியில் திரும்ப முடியவில்லை என்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

ஷூட்டிங் முடிந்தபின்
இதையடுத்து மா டிவி நிர்வாகம், நடிகை ரம்யா கிருஷ்ணனை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைத்தது. அதற்கு வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் இந்த வருடமும் அதை போலவே, ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாகவும் ஷூட்டிங் முடிந்த பின் நாகார்ஜுனா கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











