ஆட்டம்,பாட்டம்,காமெடி.. பிரபல நடிகை சமந்தா பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி.. டிஆர்பி ரேட்டிங் ஜிவ்வ்வ்!

By

சென்னை: நடிகை சமந்தா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்துள்ளதால் டீம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அர்ச்சனா, சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரின் ரணகள என்டர்டெயின்மென்டில் அமர்க்களாக நகர்கிறது நிகழ்ச்சி.

எகிற வைக்கிறது

எகிற வைக்கிறது

கூடவே, இவர்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளும் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை வைத்து வெளியாகும் புரமோ எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரணகள் ரகளை

ரணகள் ரகளை

தமிழைப் போலவே தெலுங்கு பிக் பாஸ் 4 சீசனும் ரகளையாக சென்றுகொண்டிருக்கிறது. நாகார்ஜுனா, இதை தொகுத்து வழங்குகிறார். இவர் வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கிற்காக, நாகார்ஜுனா செல்ல இருப்பதாகவும் இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்கள் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

அதன்படி படப்பிடிப்புக்காக அவர் மணாலி சென்றார். அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது. அவருக்குப் பதிலாக, ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. பின்னர் நடிகை ரோஜா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

தசராவில் சமந்தா

தசராவில் சமந்தா

ஆனால் இவர்கள் இல்லாமல், நாகார்ஜுனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த தசரா அன்று அவர் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியை பலர் பாராட்டினர். சிலர் விமர்சனம் செய்திருந்தனர்.

டிஆர்பி ரேட்டிங்

டிஆர்பி ரேட்டிங்

இந்நிலையில், சமந்தா பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி, டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மசாலாக்கள் குறைவாக இருப்பதால், கடந்த வருடத்தை விட டிஅர்பி ரேட்டிங்கில் பின் தங்கி இருந்த நிலையில் சமந்தாவின் வருகை, ஆட்டம் பாட்டம் காமெடி என சென்றதால் ரேட்டிங்கை அதிகரித்துள்ளது.

மீண்டும் நாகார்ஜுனா

மீண்டும் நாகார்ஜுனா

இதனால் தெலுங்கு பிக் பாஸ் டீம் மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மணாலி படப்பிடிப்பில் இருந்த நாகார்ஜுனா, ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார். இதனால் அவர் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X