மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? செம குத்து போங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கால் டாஸ்க்கில் ரியோவுக்கு கால் செய்த அனிதா மடக்கி மடக்கி பல கேள்விகளை கேட்டு ரியோவை செம குத்து குத்திவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கால் செண்டர் டாஸ்க் நேற்றுடன் நிறைவுப் பெற்றது.

நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வாடிக்கையாளராக இருந்த அனிதா, கால் செண்டர் ஊழியரான ரியோவுக்கு கால் செய்து காய்ச்சி எடுத்துவிட்டார்.

என்ன தகுதி வேண்டும்?

என்ன தகுதி வேண்டும்?

காலில் பேச தொடங்கியதுமே முதல் கேள்வியாக.. பிக்பாஸ் வெற்றியாளராக என்ன தகுதி வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றார். அதற்கு பதிலளித்த ரியோ இந்த வீட்டில் 100 நாள் வாழ்வதே அதற்காக தகுதியாக நான் நினைக்கிறேன் என்றார்.

கரெக்ட்டா செய்கிறேன்

கரெக்ட்டா செய்கிறேன்

தொடர்ந்து பேசிய அனிதா, பிக்பாஸில் வின் பண்ணுவதற்கு 3 குவாலிட்டிகளை சொல்லுங்கள் என்றார். அதற்கு பதில் கூறிய ரியோ, டாஸ்க் கரெக்ட்டா பண்றேன், வேலைகளை மேக்ஸிமம் செஞ்சுடுறேன், கிட்சன் வேலைகளை கரெக்ட்டா செய்து விடுகிறேன் என்றார்.

பாராட்டிய அனிதா

பாராட்டிய அனிதா

அதனை கேட்ட அனிதா அதற்கு என்னுடைய பாராட்டுக்கள், நீங்கள் கிட்சனில் இருந்தபோது எல்லா வேலைகளையும் பர்ஃபெக்ட்டாக செய்து விடுகிறீர்கள், அதை நானே பார்த்திருக்கிறேன் என்றார். மீண்டும் பேசத் தொடங்கிய ரியோ, தன்னுடைய மூன்றாவது குவாலிட்டி என்று எதை சொல்வது என்று தெரியாமல் இழு இழு என இழுத்தார்.

முன்பே குரூப்பிஸம் வந்துவிட்டது

முன்பே குரூப்பிஸம் வந்துவிட்டது

ஒரு வழியாக மூன்றாவது குவாலிட்டி என தன்னுடைய நேர்மையை சொன்னார் ரியோ. ஆனால் இதை பதிலாய் எடுத்துக்க முடியாது என்றார் அனிதா. தொடர்ந்து பேசிய அனிதா குரூப்பிஸம் என்ற வார்த்தையை கேட்டாலே உங்களுக்கு பிடிக்காது. கோபம் வரும்.. ஆனால் அர்ச்சனா அக்கா வருவதற்கு முன்பே இங்கு குரூப்பிசம் வந்து விட்டது என்றார்.

 8 ஓட்டுகள் வாங்கினேன்

8 ஓட்டுகள் வாங்கினேன்

அதற்கு ரியோ கோபமாக பதில் சொல்ல வீட்டுக்குள் கோபப்படுற மாதிரி இங்கேயும் கோபப்படாதீங்க, இது கால் அப்படிங்கிறத நினைவுல வச்சுக்கோங்க என்றார். மேலும் உங்கக்கூட சண்டை போட்ட பிறகுதான் அதிகப்பட்சமா இந்த வீட்டுல 8 ஓட்டுகள் வாங்கினேன். அதனால அந்த வாரமே போயிடுவேனோன்னு தோனுச்சு.

8 பேரைதான் கேட்கணும்

8 பேரைதான் கேட்கணும்

உங்களுக்கு அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்துச்சா? இல்லை பாலா சொன்னது உண்மையா என்ன நடந்துச்சு. நீங்கதான் சொல்லணும் என்றார். அதற்கு பதில் சொன்ன ரியோ எதுவும் பண்ணல. யார்க்கிட்டேயும் போய் நான் எதுவும் சொல்லல, அதுக்கான பதிலாய் உங்கள நாமினேட் பண்ண 8 பேரைதான் கேட்கணும் என்றார்.

Recommended Video

Cook with Comali Pavithra Lakshmi Biography | Ungalil Yaar Prabhudeva, Queen of Madras
மடக்கி மடக்கி குத்தி

மடக்கி மடக்கி குத்தி

தொடர்ந்து பேசிய அனிதா, ஒப்பீனியன் சொல்ல தேவையான இடம் தேவையில்லாத இடம் எது என்று கேட்டார். அதற்கு 13 பேரையும் பாதிக்கும் ஒரு ஒப்பீனியன் தேவையில்லாத ஒப்பீனியனா இருக்கும்ன்னு நினைக்கிறேன் என்றார் ரியோ. உடனே பேசினாதானே நம்ம ஒப்பீனியன மறுக்குறாங்களா ஒத்துக்குறாங்களா என்று தெரியும் என ரியோவை மடக்கி மடக்கி வைத்து குத்தி வெறுப்பேற்றினார் அனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X