நீதிமன்றமான பிக்பாஸ் வீடு.. முதல் கேஸே அவங்களுடையதுதான்.. ஜட்ஜ் யாருன்னு பாருங்க.. பரபரக்கும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பாலாவின் பின்னால் சனம் ஷெட்டி எட்டி உதைத்ததும் சனம் ஷெட்டியை பாலா தறுதலை, அவளே இவளே என்று பேசியதும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

அவர்களுக்குள் ஏற்பட்ட இந்த சண்டையால் பிக்பாஸ் வீடே அல்லோகளப்பட்டது. சனம் ஷெட்டி அவரை பின்னால் உதைத்த போது சிரித்து விட்டு சென்ற பாலா நேற்று அதை பிரச்சனையாக்கினார்.

சமூக வலைதளங்களிலும்

சமூக வலைதளங்களிலும்

அதோடு சமாதானப்படுத்த வந்த ஆரி உள்ளிட்டோரிடமும் ரொம்பவே ரூடாக நடந்து கொண்டார். சனம், பாலாஜி இடையேயான பிரச்சனை சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளானது. பலரும் இருவருக்குமே கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

இந்நிலையில் இன்றைய எபிசோடின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் கோர்ட் செட்டப் போடப்பட்டுள்ளது. விவாத மேடை என்ற தலைப்பில் ஒவ்வொரு ஹவுஸ்மெட்டும் சக ஹவுஸ்மெட்டுடன் இருக்கும் கருத்து வேறுபாட்டை பதிவு செய்ய வேண்டும்.

புகார் மனுக்கள்

புகார் மனுக்கள்

அதன்படி முதல் ஆளாய் பாலாஜி சனம் உடனான கருத்து வேறுபாட்டை புகாராக எழுதி கண்ணாடி பெட்டிக்குள் போடுகிறார். இதேபோல் சுரேஷ் சக்கரவர்த்தியும் சனம் மீது புகார் எழுதுகிறார். அவரை தொடர்ந்து சம்யுக்தா ஆரி மீதான கருத்து வேறுபாட்டை பதிவு செய்கிறார்.

முதல் கேஸ் விசாரணை

முதல் கேஸ் விசாரணை

சனம் ஷெட்டி பாலாஜிக்கு எதிரா எழுதப்போகிறேன் என்று கூறி புகாரை எழுதுகிறார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீடு விவாதமன்றமாக மாறுகிறது. இதில் நீதிபதியாக சுசித்ரா உள்ளார். முதல் கேஸாக பாலா சனம் மீது கொடுத்த புகார் விசாரணைக்கு வருகிறது.

சுச்சி சப்போர்ட்ஸ் பாலா

சுச்சி சப்போர்ட்ஸ் பாலா

அதில் சுச்சி, பாலாவுக்கு ஆதரவாக பேசுவது போன்று தெரிகிறது. உடனே ஆரி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனக்கு இது சரியாக படவில்லை என கூறுகிறார். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X