என்னாது.. பிக் பாஸ் 4-ல் சாண்டி மாஸ்டர் இடத்தை பிடிக்க போகும் பிரபலம் இவரா? குஷியான ரசிகர்கள்!

சென்னை: சமீபத்தில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ன் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Latest Update • Contestant List

உலக நாயகன் தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே சமயம், போட்டி தொடங்குவதற்கு முன்னரே , யாரெல்லாம் பங்கேற்க கூடும் என்று ஒரு சில பெயர்களும் இணையத்தில் உலா வருகின்றன.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் தமிழ் 4வது சீசனில் கலந்துகொள்ள போகும் ஒரு பிரபலம் குறித்த தகவல் வெளி வந்துள்ளது.

முணுமுணுக்கப்படும் பெயர்கள்

முணுமுணுக்கப்படும் பெயர்கள்

இந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சமீப காலமாக இருக்கும் நடிகர்களும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், புகழ், விஜே மணிமேகலை, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஷிவானி ஆகியோர் பெயர் அடிபட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது விஜய் டிவி காமெடி ஷோவில் பங்கு பெற்ற ஒரு காமெடி நடிகரும் இணைந்துள்ளார்.

யார் இந்த பிரபலம் ?

யார் இந்த பிரபலம் ?

தமிழில் 4வது சீசனில் கலந்துகொள்ள போகும் ஒரு காமெடி பிரபலம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது பிரபல காமெடி நடிகர் அமுதவாணன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். ஒருவேளை அமுதவாணன் கலந்துகொண்டால் கடந்த சீசனில் சாண்டி மாஸ்டரின் இடத்தை அவர் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இவர்?

ஏன் இவர்?

விஜய் டிவியில் கடந்தாண்டு கலக்கப்போவது யாரு மற்றும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன் திறமையை வெளிப்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றார் நடிகர் அமுதவாணன். அதனை தொடர்ந்து கடந்த பிக் பாஸ் சீசனில் அவர் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போன சீசனில் மிஸ் ஆனா அமுதவாணன், இந்த சீசனில் விட்ட இடத்தை பிடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அது பற்றிய உறுதியான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

சாண்டி இடத்தை நிரப்புவாரா?

சாண்டி இடத்தை நிரப்புவாரா?

ஒரு வேளை, அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால், போன சீசனில் எப்படி சாண்டி மாஸ்டர் அனைவரையும் என்டர்டைன்மெண்ட் செய்தாரோ அதே போல் இந்த சீசனில், நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே போல் ஷெரின் மற்றும் லாஸ்லியா இடத்தை ரம்யா பாண்டியன் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள 4வது பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஒளிபரப்பாகும் என்றும், இந்த மாதம் 20ம் தேதி அதற்கான ஷூட்டிங் பணிகள் நடைபெறும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பொதுவாக அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியே முடிந்து விடும் நிலையில், இந்த ஆண்டு பிரபலங்கள் தங்கள் தீபாவளியை பிக்பாஸ் வீட்டிலேயே கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X