அனிதா சம்பத்த கமல் கண்டிக்காததற்கு காரணம் இதானாம்..பரபரக்கும் யுக்திகள்..அடுத்த கட்டத்தில் பிக்பாஸ்!

சென்னை: பிக்பாஸில் அனிதா சம்பத்தை கமல் கண்டிக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss Anitha Sampath Husband Prabha reply to haters • Choreographer Sathish

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முதல் வாரத்திலேயே எதிர்பார்த்ததை தாண்டியும் பரபரப்பாக இருந்தது.

குறிப்பாக முதல் வாரத்தில் மக்களிடையே அதிக ரீச் ஆனது, அனிதா சம்பத், சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திதான்.

எரிச்சலை கிளப்பினார்

எரிச்சலை கிளப்பினார்

இதில் அனிதா சம்பத்தான் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக ரீச் ஆனார். சுரேஷ் சக்கரவர்த்தியை வம்பிழுப்பது, மரியாதை குறைவாக பேசுவது, நக்கலடிப்பது, அவருக்கு எதிராக டீம் சேர்ப்பது என எரிச்சலை கிளப்பினார்.

அபாண்ட குற்றச்சாட்டு

அபாண்ட குற்றச்சாட்டு

இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் கழுவி ஊற்றப்பட்டார் அனிதா சம்பத். செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா தவறும் சுரேஷ் சக்கரவர்த்தி மீதுதான் என்றும் போட்டுவிட்டார். சனிக்கிழமை கமல் பேசும் போது கூட சுரேஷ் சக்கரவர்த்தி மீது அபாண்டாமான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

கேவலமான பார்வை

கேவலமான பார்வை

அதோடு கமல் பேசும் போது, அனிதா கொடுத்த ரியாக்ஷன், தீயாய் பரவியது. சுரேஷ் சக்கரவர்த்தியை கேவலமாக ஒரு பார்வை பார்த்ததோடு வாய்க்குள்ளேயே முனுமுனுத்தார். அந்த வீடியோ பெரும் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அனிதா சம்பத்தை வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்தனர்.

பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

சுரேஷ் சக்கரவர்த்தியிடம் வீணாக வம்பிழுத்த அனிதாவை கமல் ஏதாவது கண்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனிதாவை பட்டும் படாமல் பார்த்த நடிகர் கமல், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கொஞ்சம் காட்டம் காட்டினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கண்டிக்காததற்கு காரணம்?

கண்டிக்காததற்கு காரணம்?

இந்நிலையில் அனிதாவை கமல் கண்டிக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, சுரேஷ் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், அவரை கண்டித்தால் அவர் இன்னமும் அடங்கி விடுவார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகரிக்கும்.

முகத்திரை கிழியும்

முகத்திரை கிழியும்

ஆனால் அனிதாவை கண்டிக்காமல் விட்டால், சுரேஷ் மீதுதான் தவறு உள்ளது, நாம் செய்ததில் எந்த தவறும் இல்லை என இன்னும் தனது ஆட்டத்தை அதிகரித்து விடுவார். ஏற்கனவே அவரது உண்மை முகம் வெளிப்பட்டுவிட்ட நிலையில் அவரது மொத்த முகத்திரையும் கிழிந்து விடும்.

மீண்டும் கச்சேரி

மீண்டும் கச்சேரி

இதனை மனதில் வைத்தே நிகழ்ச்சிக் குழு காய் நகர்த்தி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கேற்றார் போலவே அனிதா சம்பத், கமலுக்கு எதிரே சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஷேக் ஹேண்ட் கொடுத்ததும் பின்னர் ஹார்ட் பிரேக்குகளை கொடுத்ததும் மீண்டும் கச்சேரி இருப்பதை காட்டுவதாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X