ஃபேக்.. சைலன்ட் கில்லர்.. சோம்பேறி..க்ரைம் பார்ட்னர்..ஹவுஸ்மேட்ஸ் குறித்து கிழித்துவிட்ட சுசித்ரா!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுச்சி ஹவுஸ்மேட்ஸ் குறித்து பட்பட்டென புட்டு புட்டு
வைத்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுச்சி மூன்றாவது வாரத்திலேயே முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்று வெளியேறினார்.

மக்கள் அவசரப்பட்டு தன்னை வெளியே அனுப்பி விட்டதாக கூறிய சுச்சி, பிக்பாஸ் வீட்டுக்குள் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ஹவுஸ்மேட்ஸ் குறித்து கேட்ட கமல் ஒவ்வொருவரின் பெயராக சொல்ல பட்டு பட்டென பதில் சொல்லி பட்டாசாய் வெடித்தார்.

 ஸ்வீட் ஹார்ட்

ஸ்வீட் ஹார்ட்

அந்த வகையில் கமல், சனம் ஷெட்டியின் பெயரை கூறியதும், ஸ்வீட் ஹார்ட், நல்ல பெண். அவரை தவறாக புரிந்து கொண்டேன். அந்த வீட்டில் அவரை கேலி செய்வதையெல்லாம் மெடலாக எடுத்து குத்திக்கொள்கிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இருமுகம்

இருமுகம்

தொடர்ந்து ரியோவின் பெயரை கமல் கூற அவருக்கு இருமுகம் உள்ளது. எப்போதும் இருக்கும முகம் ஒன்று கேமராவுக்கு முன்பான முகம் ஒன்று. மிட் நைட்டில் அவர் பேசுவதை நான் சொல்லவா என்று கேட்ட சுச்சி, மிட் நைட்டில் மற்றவர்களை பற்றிதான் பேசுவார்கள். அங்குள்ள இரண்டு பெட்டுகள் கிசுகிசு பேசும். அவர்கள் போடும் திட்டங்களை பல முறை கேட்டிருக்கிறேன் என்றார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அடுத்து அர்ச்சனா குறித்து கமல் கேட்க, அந்த டீம்மால் டிஸ்பாயிண்டட் தான் என்ற சுச்சி, அர்ச்சனாவுடன் இணைந்து பல முறை வேலை பார்த்துள்ளேன். தொழில் முறையாக நல்ல உறவு இருந்தபோதும் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

 சைலன்ட் கில்லர்

சைலன்ட் கில்லர்

ரம்யா குறித்து பேசிய சுச்சி, ரம்யா ஒரு சைலன்ட் கில்லர். அதை அவரே ஒப்புக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலேயே ரொம்ப தெளிவு. அவருடன் பேசும் போது குட் வைப்ஸ் கிடைக்கும். என்னை மற்றவர்கள் கிண்டல் செய்திருக்கும் போது சிரித்திருக்கலாம். ஆனால் என்னிடம் பேசும் போது அன்பாகதான் நடந்திருக்கிறார் என்றார்.

 பேட் வைப்ஸ்

பேட் வைப்ஸ்

ஷிவானி குறித்த கேள்விக்கு பதிலளித்த சுச்சி, ஷிவானி முழுக்க முழுக்க பேட் வைப்ஸ் தான் கொடுத்தார். அவருக்கு எனக்கும் பாலாஜிக்கும் இடையிலான ஃபிரண்ட்ஷிப் பிடிக்கவில்லை. அதனை பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.

 உண்மை ரேடார்

உண்மை ரேடார்

அனிதா குறித்து கமல் கேட்டதற்கு உண்மை ரேடார் என்ற சுச்சி, நல்ல பெண் என்றார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து கொண்டு செல்லும் ஒன்றிரண்டு சொத்துக்களில் அனிதாவின் நட்பும் ஒன்று. வெளியேவும் அவருடன் நல்ல நட்பை தொடருவேன் என்றார்.

 நேர்மை ரேடார்

நேர்மை ரேடார்

தொடர்ந்து ஆரி குறித்து பேசிய சுச்சி, அமேஸிங் பர்சன், நேர்மை ரேடார். நல்ல ஸோல், மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பார். நேர்மையாக விளையாடி வருகிறார். ஸ்ட்ரைட் ஃபார்வர்டாக உள்ளார் என்றார்.

 முழுக்க முழுக்க ஃபேக்

முழுக்க முழுக்க ஃபேக்

நிஷா குறித்த கேள்விக்கு பதிலளித்த சுச்சி அவரை கழுவி ஊற்றினார். நிஷா முழுக்க முழுக்க ஃபேக், பொய் சொல்றாங்க. ரியோ விஷயத்திலும் அவரை தம்பி தம்பி என்று கூறுவதை நம்ப முடியவில்லை. பல கேம்ஸ் விளையாடி வருகிறார் என முழுக்க முழுக்க நெகட்டிவாக கூறினார் சுச்சி.

 பப்பட்

பப்பட்

அடுத்து சோம சேகர் குறித்து பேசிய சுச்சி, ஸ்வீட் பர்சன், பிக்பாஸ் வீட்டில் உள்ள குழந்தை அவர். பப்பட் என்ற வார்த்தைக்கு பொறுத்தமானவர். பலரின் தோள்பாவையாக உள்ளார். அவரை கேப்டனாக்க ஹவுஸ்மேட்ஸ் முயற்சிப்பது கூட அதனால்தான் என்றார்.

 க்ரைம் பார்ட்னர்

க்ரைம் பார்ட்னர்

பாலா குறித்து கருத்து சொன்ன சுச்சி, என்னுடைய நெருங்கிய நண்பர். க்ரைம் இன் பார்ட்னர். என்னுடைய எல்லா விஷயங்களிலும் உடன் இருப்பவர். நன்றாக விளையாடுகிறார். அவர் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன் என்றார்.

 சோம்பேறி

சோம்பேறி

தொடர்ந்து ரமேஷ் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுச்சி, அவர் ஒரு சோம்பேறி என்றார். அவர் மேல்பார்வை செய்யதான் லாயக்கு. அவருடைய உண்மையான நிறம் நல்லதாக இல்லை. என்னை வெளியே வருவல்ல பார்த்துக்றேன் என்று மிரட்டினார். அதனால்தான் அவரை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்றேன்.

 ரொம்ப டிஸ்அப்பாயிண்டட்

ரொம்ப டிஸ்அப்பாயிண்டட்

சம்யுக்தா குறித்து பேசிய சுச்சி, அவரால் ரொம்ப ரொம்ப டிஸ்அப்பாயிண்டட் என்றார். அவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார். இருந்த போதும் நான் தான் தவறாக நினைத்துக்கொண்டேன் என்று 20 நிமிஷம் அவரிடம் பேசி மன்னிப்பு கேட்டேன். ஆனால் இரண்டு மூன்று விஷயங்களை நுழைச்சு என்னிடம் சொல்லப் பார்த்தார் அதைக்கூட நான் பெரியதாய் எடுத்துக்கொள்ளவில்லை. சிடுமூஞ்சி மேக்ஸ் என்று சொன்னது நான்தான் என்று கூறினார் என்றார். அப்போது குறுக்கிட்ட கமல், சிடுமூஞ்சி மேக்ஸ் என்ற பட்டம் உங்களுக்கு கொடுக்கப்பட்டதல்ல என்றார். அதற்கு பதில் சொன்ன சுச்சி என்னிடம் அதை அவர் தெளிவு பண்ணவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X