'அதுக்கு இவ்ளோ.. இதுக்கு அவ்ளோ..' பிக் பாஸ் வின்னருக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? இதுதான் கணக்கு!
ஐதராபாத்: பிக் பாஸ் வின்னருக்கு கிடைத்துள்ள மொத்த தொகை பற்றிய விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி.
இந்தி நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்க, தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

நாகார்ஜுனா
தெலுங்கில் வழக்கம் போல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சுதீப்பும் வழங்க இருக்கிறார். தமிழ் பிக் பாஸ், தொடங்குவதற்கு முன்பே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமாகத் தொடங்கி விட்டது.

யார் வெல்வார்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இதன் ஃபைனல் நடந்தது. 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடந்தது. பைனல் லிஸ்ட்டில் ஐந்து பேர் இருந்தனர். இதில் டைட்டிலை யார் வெல்வார்கள் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

பிக் பாஸ் கோப்பை
நடிகர் அபிஜித் வெல்வார் என்று பலரும் கணித்திருந்தனர். அதைப் போலவே பிக் பாஸ் வின்னராக அவர் அறிவிக்கப்பட்டார். ரசிகர்களின் வாக்குகள் மூலம் அவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிரபல தெலுங்கு ஹீரோ, மெகா ஸ்டார் சிரஞ்சீவி கையால் பிக் பாஸ் கோப்பையும் பரிசு தொகை ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டது.

மிர்ச்சி லண்டி குர்ராடு
பிக் பாஸ் டைட்டிலை வென்ற அபிஜித், தெலுங்கில் சேகர் காமுலா இயக்கிய லைஃப் இஸ் பியூட்டிபுல் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். அடுத்து ராம் லீலா, மிர்ச்சி லண்டி குர்ராடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அரேரே என்ற படத்தில் நடித்திருந்தார்.

கூடவே ஒரு பைக்
இந்நிலையில் வெற்றிபெற்ற நடிகர் அபிஜித்துக்கு எவ்வளவு தொகை கிடைத்துள்ளது என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் தங்குவதற்கு வாரத்துக்கு ரூ.4 லட்சம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கு 60 லட்சம் ரூபாய் கிடைத்தது. பரிசுத் தொகையாக ரூ.25 லட்சம் கிடைத்துள்ளது. மொத்தம் ரூ.85 லட்சம் கிடைத்துள்ளது. கூடவே ஒரு ஸ்டைலான பைக்கும் பரிசாகக் கிடைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











