பிக் பாஸ் வீட்டில் ஆயுதபூஜை கொண்டாட்டம்… நாடகம் போட்டு அசத்திய போட்டியாளர்கள் !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் பாண்டிகை கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கி உள்ளது. ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் என வரிசையாக பாண்டிகை சீசன் வர உள்ளது.

அதில், முதலாவதாக ஆயுதபூஜை பாண்டிகையை போட்டியாளர்கள் வெகு சிறப்பாக நாடகம் நடத்தி கொண்டாடினார்கள்.

தாமரை தலைமையில் பிக்பாஸ் இல்லத்தில் நாடகம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, முத்தாலம்மனும் மூப்பெரும் தேவியும் என்ற தலைப்பில் நாடகம் நடித்து காட்டப்பட்டது.

இசைவாணியின் பாட்டுடன்

இசைவாணியின் பாட்டுடன்

இதில், ஆரம்பமே அமர்க்களம் என்பது போல கானா பாடகி இசைவாணி பிக் பாஸ் வீட்டு உள்ள நாங்க எல்லாரும் செல்ல பிள்ளை என்று.... சூப்பரா ஒரு கானாபாட்டுப்பாடி அசத்தினார். இதையடுத்து வந்த சின்னப்பொண்ணு முந்தி முந்தி விநாயகர் பாடலை பாடி நாடகத்தை தொடங்கி வைத்தார்.

அவதாரம்

அவதாரம்

இதையடுத்து, சிவபெருமான் வேடத்தில் நிரூப்பும், பார்வதியாக இசைவாணியும் காட்சி அளித்தனர். இதில் பெண் இனத்தை இழிவாக பேசி,பெண் இனத்தை அழிக்க நினைக்கும் வெல்லுடையான் என்பவனை அழிக்கும் அவதாரமாக தாமரைச்செல்வி மறுபிறவி எடுத்து பிறக்கிறாள்.

ஆயுதபூஜை வாழ்த்துக்கள்

ஆயுதபூஜை வாழ்த்துக்கள்

அம்மானாக மறுபிறவி எடுத்த தாமரைச்செல்வி இறுதியில் வெல்லுடையான் ராஜாவை கொன்று மூப்பேரும் தேவியரும் ஒன்றாக இணைந்து காட்சி அளித்தனர். இதையடுத்து ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்களை கூறினர். இதில் ராஜுமோகன் கோமாளியாக நடித்திருந்தார் அனைவரும் இதில் அந்த அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தபடி வேடமிட்டு அழகாக நடித்திருந்தனர்.

சலசலப்பு

சலசலப்பு

நாடகம் தொடங்கும் போது சின்னப்பொண்ணு என்னை நோஸ்கட் பண்ணமாதிரி இருந்தது என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். அதற்கு பிரியங்காவும் உரிய விளக்கத்தை கொடுத்தார். நாடகத்தின் இடையில் சலசலப்பு ஏற்பட்டாலும் நாடகத்தை அழகாக செய்து முடித்தனர்.

Recommended Video

IPL 2021: Thala Dhoni-யை பாராட்டிய Simbhu, Dhanush | Celebrity Celebration
வெளியேறுவது யார்

வெளியேறுவது யார்

கடந்தவாரம் எலிமினேஷன் இல்லை, ஆனால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கிறது. பாவனி மற்றும் வீட்டின் தலைவரான தாமரைச்செல்வியை தவிற அனைவருமே 15 போட்டியாளர்களும் எலிமினேஷன் ப்ராஸஸிற்கு நாமினேட் ஆகியுள்ளார்கள். அந்த வகையில் பிக்பாஸ் வோட்டிங் லிஸ்டில் நாடியா சாங், அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் மிக குறைந்த வாக்குகளை பெற்றிருப்பதால்,இந்த மூவரில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X